ஜங்சன் ரயில் நிலையத்தில் 5 ரூபாய்க்கு ஒரு லிட்டர் தண்ணீர் - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

புதன், 29 ஜனவரி, 2025

ஜங்சன் ரயில் நிலையத்தில் 5 ரூபாய்க்கு ஒரு லிட்டர் தண்ணீர்

IMG-20250129-WA0001(1)


சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர்.


ரெயிலில் பயணம் செய்பவர்களுக்கு சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ரெயில்வேத்துறை சார்பிலும் குடிநீர் பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதற்கிடையே குறைந்த விலையில் பயணிகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க ரெயில்வே நிர்வாகம் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. அதாவது குளோபல் கிரியேட்டர்ஸ் நிறுவனம் சார்பில் ஜங்சன் ரெயில் நிலைய 5 மற்றும் 3-வது நடைமேடைகளில் குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம் வைக்கப்பட்டுள்ளது. இந்த எந்திரம் நேற்று ரெயில் பயணிகளின் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டது. ரெயில்வே கோட்ட முதுநிலை வணிக மேலாளர் பூபதி ராஜா ரிப்பன் வெட்டி குடிநீர் சுத்திகரிப்பு எந்திரத்தை பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தார். அப்போது 5 ரூபாய் நாணயத்தை போட்டு ஒரு லிட்டர் குடிநீர் பெற்று வணிக மேலாளர் பூபதி ராஜா குடித்து பார்த்தார். பின்னர் அவர் கூறியதாவது:-சேலம் ரெயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட சேலம், கோவை ஜங்ஷன் ரெயில் நிலையங்களில் இந்த வசதி தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் ஈரோடு, திருப்பூர் ரெயில் நிலையங்களில் தொடங்கப்பட உள்ளது. பொதுமக்களுக்கு குறைந்த விலையில் தரமான குடிநீர் வழங்கும் வகையில் 24 மணி நேரமும் செயல்படும் இந்த சுத்திகரிப்பு எந்திரம் வைக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad