திமுக துணை பொது செயலாளரும், தூத்துக்குடி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி எம்பியின் 57வதுபிறந்தநாள் விழா - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 5 ஜனவரி, 2025

திமுக துணை பொது செயலாளரும், தூத்துக்குடி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி எம்பியின் 57வதுபிறந்தநாள் விழா

திமுக துணை பொது செயலாளரும், தூத்துக்குடி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி எம்பியின் 57வதுபிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. 

இதையொட்டி தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், மீன்வளம் , மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் ஆலோசனையின் படி உடன்குடி மேற்கு ஒன்றிய திமுக சார்பில் மெஞ்ஞானபுரத்தில் கனிமொழி எம்பி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
 
உடன்குடி ஒன்றிய திமுக செயலாளரும், ஒன்றிய குழு தலைவருமான பாலசிங் தலைமையில் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய துணைச் செயலாளர்கள் சுடலைக்கண், இசக்கிமுத்து, விஜயா, மாவட்ட திமுக இலக்கிய அணி துணை அமைப்பாளர் ரஞ்சன், மாவட்ட பிரதிநிதி ராஜபிரபு, 

கிளை செயலாளர்கள் சிவக்குமார், லூகாஸ், பொன் இசக்கி, சித்திரைப் பாண்டியன், ராஜ்குமார், சந்திரவேல், ஜோசப் ராஜா, ஜெயராணி, பாப்பா, ஜெபக்கனி, வேப்பங்காடு ஆபிரகாம் தேவராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தமிழக குரல் செய்திகளுக்காக MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad