கே வி குப்பம் வட்டம் கொசவன் புதூர் கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் மற்றும் ஒரு கோடியே 57 லட்சத்து 80 ஆயிரம் மதிப்புள்ள நல திட்டங்கள் வழங்கும் விழா ! - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 29 ஜனவரி, 2025

கே வி குப்பம் வட்டம் கொசவன் புதூர் கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் மற்றும் ஒரு கோடியே 57 லட்சத்து 80 ஆயிரம் மதிப்புள்ள நல திட்டங்கள் வழங்கும் விழா !


கே வி குப்பம் , ஜன 29 -
வேலூர் மாவட்டம் கே வி குப்பம் வட்டம் கொசவன் புதூர் கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் மற்றும் ஒரு கோடியே 57 லட்சத்து 80 ஆயிரம் மதிப்புள்ள நல திட்டங்கள் வழங்கும் விழா  கே வி குப்பம் வட்டம் கொசவன் புதூர் கிராமத்தில் இன்று காலை மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது

நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் வே இரா சுப்புலட்சுமி தலைமை தாங்கினார் ஒன்றிய பெருந்தலைவர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார்
கே வி குப்பம் வட்டாட்சியர் சந்தோஷ் வரவேற்புரை ஆற்றினார் தலைமை உரை ஆற்றிய மாவட்ட ஆட்சித் தலைவர் பேசுகையில் மாதத்தில் மூன்றாவது புதன்கிழமை அன்று கொசவன் புதூர் கிராமத்தை தேர்வு செய்து அங்குள்ள பொதுமக்களிடம் இரண்டு வாரங்களுக்கு முன்பே மனுக்கள் பெற்று அந்தமனுக்கள் மீது பரிசீலனை செய்யப்பட்டது அதில் 253 மனுக்கள் பெறப்பட்டு 174 மனுக்களுக்கு தீர்வு ஏற்பட்டு ஒரு கோடியே 57 லட்சத்து 80 ஆயிரம் மதிப்புள்ள நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது கலைஞர் கனவு இல்லம்   திட்டத்தின்  கீழ் மாவட்டத்தில்
2700  வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுது
அடுத்த ஆண்டு பயனாளிகளை தேர்வு செய்து வீடுகள் வழங்க உள்ளோம்
சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட தொகுப்பு வீடுகளில் உள்ள பொது மக்களுக்கு வீடுகளை  செப்பனன   செய்வதற்காக சுமார் 75 ஆயிரம் வரை கடன் உதவி வழங்க உள்ளோம்
அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு காலை உணவு திட்டம்
கடந்த மாதம் புதிய திட்டங்கள் அறிவிக் கப்பட்டுள்ளது அதில் கலைஞர்  கைவினை திட்டம் இதில் முடி திருத்துவர் சலவை தொழிலாளர்கள் மண் பாண்டம் தொழிலாளர்கள் அண்ணல் அம்பேத்கர் சிறப்பு திட்டம் போன்ற திட்டங்களில் சேர்ந்து பயன் அடையுங்கள் என்று பேசினார் இந்நிகழ்ச்சியில்
வீட்டுமனை பட்டாக்கள் முதியோர் ஓய்வூதியம் தையல் எந்திரம் மகப்பேறு தொகுப்பு பெட்டகம் வேளாண் கருவிகள் நடமாடும் காய்கறி வண்டி போன்ற நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது
வருவாய் கோட்டாட்சியர் சுபலட்சுமி
ஒன்றிய குழு உறுப்பினர் சீதாராமன்
கொசவன் புதூர் ஊராட்சி மன்ற தலைவர் புவனேஸ்வரி கட்டு கல்  பாஸ்கர் உள்பட மக்கள் பிரதிநிதிகள் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர இறுதியில் மாவட்ட வழங்கல் அலுவலர் சுமதி நன்றி கூறினார்.

கே வி குப்பம் தாலுகா செய்தியாளர்  குபேந்திரன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad