சிவகங்கையில் நடைபெற்ற அரசு விழாவில் 53039 திட்ட பயனாளிகளுக்கு ரூபாய் 161.11 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர்.
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு மு. க. ஸ்டாலின் அவர்கள் சிவகங்கையில் நடைபெற்ற அரசு விழாவில், முடிவுற்ற திட்ட பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டில், பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட பணிகளை வழங்கி உரையாற்றினார். அவர் ஆற்றிய உரையில் சில விவரங்கள் பின்வருமாறு,
தற்போதைய ஆட்சியில் செய்யப்பட்டிருக்கக்கூடிய சில திட்டங்களை நினைவுபடுத்த விரும்புகிறேன்.
1. சிவகங்கை, திருப்பத்தூர், நெற்குப்பை, இளையான்குடி, கல்லல், காளையார்கோவில் உள்ளிட்ட பகுதி மக்கள் பயனடையக்கூடிய வகையில், 616 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம்!
2. சிவகங்கை மருத்துவக் கல்லூரி!
3. 55 திருக்கோயில்களில், 14 கோடி ரூபாய் செலவில் திருப்பணி
4. இளையான்குடியில், சார்பதிவாளர் அலுவலகம், நீதிமன்றக் கட்படம், கருவூலம், ஆதிதிராவிட மாணவர்களுக்கான தங்கும் விடுதி, அரசு மருத்துவமனை விரிவாக்கம்!
5. இளையான்குடியில் புறவழிச் சாலை!
6. சிவகங்கையில் ஒருங்கிணைந்த நீதிமன்றம், மாணவ மாணவியர் விடுதிகள், பள்ளிக் கட்டடங்கள், அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள்!
7. மதுரை-தொண்டி தேசிய நெடுஞ்சாலை! சிவகங்கையில்
8. புதிய நகராட்சிக் கட்டடம்!
9. மகளிர் கல்லூரி!
10.கூட்டுறவு தொழிற்பயிற்சி கல்லூரி என்று இப்படி சொல்லிக் கொண்டிருந்தால், நாள் முழுவதும் நான் வரிசைப்படுத்தி சொல்லிக்கொண்டே இருக்கலாம்!
அதுமட்டுமல்ல, திராவிட மாடல் அரசில் கடந்த மூன்றரை ஆண்டு காலத்தில், அறிவிந்து, செயல்படுத்திக் கொண்டிருக்கக்கூடிய திட்டங்கள் குறித்தும், நேற்று நான் காரைக்குடியில் ஆட்சியர் மற்றும் அரசு அதிகாரிகளுடன் ஆய்வு செய்தேன். அந்த பணிகளைப் பட்டியலிட்டு சொல்லவேண்டும் என்றால், ஊரக
1. காவிரி ஆற்றை நீர் ஆதாரமாகக் கொண்டு. எட்டு பேரூராட்சிகளுக்கும், இரண்டாயிரத்து 452 ருடியிருப்புகளுக்கும், மூன்று நகராட்சிகளுக்கும், ஆயிரத்து 753 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெறும் கூட்டுக் குடிநீர்த் திட்டப் பணிகள் விரைவில் நிறைவடைய போகிறது!
2. காரைக்குடியில் சங்கரபதி கோட்டை மறுசீரமைப்பு
3. 130 கோடி ரூபாய் மதிப்பீட்டில், தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின்கீழ் 900 ருடியிருப்புகள்
4. மினி விளையாட்டு அரங்கம்
5. 35 கோடி ரூபாய் மதிப்பீட்டில், நியோ ஐ.டி பார்க் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சட்டக்கல்லூரிப் பணிகள்
6. சிறாவயல் கிராமந்நில் விடுதலைப் போராட்ட வீரர் தியாகி ஜீவானந்தம் நினைவு மணிமண்டபம்
7. 62 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செட்டிநாடு வேளாண்மை கல்லூரி, சிவகங்கை ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடம்
8. சிவகங்கை அரசு மருத்துவமனையில் கூடுதல் மகப்பேறு மருத்துவ கட்டடம், அதி தீவிர சிகிச்சை பிரிவு கட்டடம்,
9. சிவகங்கை நகர் பேருந்து நிலையம் சீரமைப்பு
10. மானாமதுரையில் புதிய ஐ.டி.ஐ
11. 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 248 வீடுகள் கட்டும் பணி
12. நாட்டார் கால்வாய் திட்டம்
13. 39 கோடி ரூபாய் மதிப்பீட்டில், மானாமதுரை நகர் குடிநீர் திட்டம்,
2 கோடியே 64 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில், திருப்புவனம் பேரூராட்சி குடிநீர் வழங்கும் திட்டம்
14. 17 கோடியே 75 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில், திருப்புவனம் ஒன்றியம் லாடனேந்தல் - பெத்தானேந்தல் இடையே வைகை ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம்
15. இளையான்குடி பேரூராட்சியில் 28 கோடி ரூபாய் மதிப்பீட்டில், வைகை கூட்டுக் குடிநீர் திட்டம் என்று பல்வேறு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது!
கடந்த மூன்றரை ஆண்டுகளில், இந்தச் சிவகங்கை மாவட்டத்தில் மட்டும் நம்முடைய அரசின் திட்டங்களால் பயனடைபவர்களின் எண்ணிகையை சொல்கிறேன்.
1. கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில், இரண்டு இலட்சத்து 38 ஆயிரத்து 428 குடும்ப தலைவிகள் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள்! வங்கிக் கணக்கில், பணம் வந்தவுடனே, எங்கள் அண்ணன் ஸ்டாலின், நாய்வீட்டுச் சீர் அனுப்பி வைந்திருக்கிறார் என்று என்னுடைய சகோதரிகள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.
2. அதேபோல், கல்லூரிக்குச் செல்ல வேண்டுமே, சிறிய, சிறிய தேவைகளின் செலவுக்கு என்ன செய்வது என்று கஷ்டப்படும் மாணவ மாணவிகளுக்கு, மாதம் ஆயிரம் ரூபாய் என்று வருடத்திற்கு, 12 ஆயிரம் ரூபாயை, எங்கள் அப்பாவாக இருந்து, தருகிறார் என்று மாணவ மாணவிகள் சொல்கிறார்கள்!
3. அந்த "புதுமைப்பெண்" திட்டத்தில் ஏழாயிரத்து 210 மாணவிகளும் "தமிழ்ப்புதல்வன்" திட்டத்தில், ஆறாயிரத்து 76 மாணவர்களும் பயன்பெற்று க் கொண்டிருக்கிறார்கள்!
4. அடுத்து, மகளிர் சுய உதவிக்குழுக்களைப் பொறுத்தவரைக்கும், கடந்த காலங்களில், நான் துணை முதலமைச்சராக இருந்தபோது, உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபோது, மணிக்கணக்கில் மேடையில் நின்று வழங்கியிருக்கிறேன். சுழல்நிதியால் எத்தனையோ சகோதரிகள் சுயதொழில் செய்து இன்றைக்கு முன்னேறியிருக்கிறார்கள். அந்நந் திட்டத்தில் கணக்கெடுத்துப் பார்த்தால், 855 கோடி ரூபாய் கடனுதவி நரப்பட்டிருக்கிறது.
5. பசியால் மாணவச் செல்வங்கள் அவதிப்படக் கூடாது என்று தொடங்கப்பட்டத் திட்டம் தான் காலை உணவுத் திட்டம், அந்தத் திட்டத்தில், 37 ஆயிரம் மாணவர்கள் சுவையாக வயிறார சாப்பிடுகிறார்கள்!
6. மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில், 12 இலட்சம் பேருக்கு சிகிச்சை அளித்திருக்கிறோம்!
7. மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில், ஒரு இலட்சத்து 34 ஆயிரம் பேர் பயனடைந்திருக்கிறார்கள்!
8. 62 ஆயிரம் பேருக்கு, முதியோர் ஓய்வூதியம் வழங்கியிருக்கிறோம்!
9. 27 ஆயிரத்து 938 பேருக்கு மனைப் பட்டாக்கள் வழங்கியிருக்கிறோம்!
10. 23 ஆயிரத்து 553 பேரின் நகைக்கடனை தள்ளுபடி செய்திருக்கிறோம்!
11. 24 ஆயிரத்து 969 உழவர்களுக்கு பயிர்க்கடன் வழங்கியிருக்கிறோம்!
12. எட்டு இலட்சம் உழவர்களுக்கு பல்வேறு உதவிகள் செய்யப்பட்டிருக்கிறது!
13. மூன்றாயிரத்து 822 உழவர்களுக்கு புதிய இலவச மின் இணைப்பு வழங்கியிருக்கிறோம்!
14. 65 திருக்கோயில்களில், குடமுழுக்கு நடத்தியிருக்கிறோம்!
15. கழனிவாசல் கிராமத்தில் சிப்காட் வளாகம் அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது!
இதுமட்டுமல்ல, இந்தச் சிவகங்கை மாவட்டத்தில், இதுவரைக்கும் 91 ஆயிரத்து 265 பேருக்கு, 38 கோடியே 52 இலட்சத்து 55 ஆயிரத்து 476 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டிருக்கிறது!
இதெல்லாம் சிவகங்கை மாவட்டத்திற்கு மட்டும், கடந்த மூன்றரை ஆண்டு ஆட்சி காலத்தில் நாம் செய்திருக்கிறோம்! இந்த விழாவில் மூன்று அறிவிப்புகளை நான் வெளியிட விரும்புகிறேன்.
1. முதல் அறிவிப்பு - இப்போது சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகமாக இருக்கும் கட்டடம் கட்டப்பட்டு 40 ஆண்டுகள் ஆகி, அது பழுதடைந்து, இடப்பற்றாக்குறை சூழ்நிலையில் இருக்கிறது என்பது உங்கள் எல்லோருக்கும் தெரியும். அதனால், பல துறைகளின் அலுவலகங்கள் வாடகைக் கட்டடங்களில் இயங்கிக்கொண்டு இருப்பதாலும், எல்லா மாவட்ட அலுவலகங்களும் ஒரே இடத்தில் சிறப்பாக செயல்படும் வகையில் 89 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய கூடுதல் கட்டடம் கட்டப்படும்!
2. இரண்டாவது அறிவிப்பு - சிங்கம்புணரி, திண்டுக்கல் மற்றும் காரைக்குடி நகரங்களுக்குச் செல்லும் வாகனங்கள் - திருப்பத்தூர் நகரப் பகுதிக்குள் வராமல் செல்லும் வகையில், திருப்பத்தூர் நகரத்திற்கு 50 கோடி ரூபாய் செலவில் புதிய புறவழிச்சாலை அமைக்கப்படும்.
3. மூன்றாவது அறிவிப்பு -கடந்த ஆண்டு மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு, விரிவாக்கப்பட்ட காரைக்குடி மாநகராட்சிக்கு புதிய மாநகராட்சி அலுவலகம் அமைக்க 30 கோடி ரூபாய் நிதி உதவி வழங்கப்படும்.
மக்களிடம் உண்மைகளை எடுத்துச் சொல்ல வேண்டிய கடமையும், பொறுப்பும் எங்களுக்கு இருக்கிறது. காரணம், நாங்கள் அரசாங்கத்தில் இருக்கிறோம். அரசை வழிநடத்திக்கொண்டிருக்கிறோம். அதனால் உங்களிடம் புள்ளிவிவரத்தோடு சொல்ல விரும்புகிறேன். 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கொடுத்த 505 தேர்தல் வாக்குறுதிகளில் 389 வாக்குறுதிகளை நிறைவேற்றியிருக்கிறோம்! இன்னும் வாக்குறுதிகள்தான் நிறைவேற்றப்படவேண்டும்!
அரசில் மொத்தம் 34 துறைகள் இருக்கிறது. ஒவ்வொரு துறைக்கும் இரண்டு-மூன்று திட்டங்களை நிறைவேற்ற வேண்டிய அளவில்தான் மீதம் இருக்கிறது. நாங்கள் அதை ஏற்றுக்கொள்கிறோம். ஒப்புக்கொள்கிறோம் என்று உரையாற்றினார்.
இந்நிகழ்வில் அமைச்சர்கள் திரு கே. ஆர். பெரியகருப்பன், திரு ராஜகண்ணப்பன், முனைவர் கோவி செழியன், பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி ப. சிதம்பரம், சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழரசிரவிக்குமார் மாங்குடி, மாவட்ட ஆட்சித் தலைவர் ஆஷா அஜீத் இ.ஆ.ப, திட்ட பயனாளிகள், ஊடகத்துறையினர், அரசு அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், காவல்துறையினர் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக