திருப்பூர் 50 ஆவது வார்டில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அடிப்படை வசதிகள் நிறைவேற்ற கோரி மாநகராட்சி ஆணையாளரிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.
திருப்பூர் மாநகராட்சி 50 ஆவது வார்டு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அடிப்படை கட்டமைப்புகளை செய்து தர கோரியும் 50 வது வார்டைச் சேர்ந்த பொதுமக்கள் திருப்பூர் மாநகராட்சி ஆணையாளரிடம் மனு கொடுத்தனர் அந்த மனுவில் கூறியிருப்பதாவது திருப்பூர் மாவட்டம் முழுவதும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனால் மாநகராட்சியின் மையப்பகுதியில் அமைந்துள்ள
50 வது வார்டுக்கு உட்பட்ட பெரியதோட்டம் பகுதியில் மொத்தம் 9 வீதிகள் உள்ளன இந்த பகுதிகளில் முறையாக சாக்கடைகள் தூர்வாரப்படுவது இல்லை.. 15 நாட்களுக்கு ஒருமுறை சாக்கடை தூர்வாரப்பட்டாலும் முழுவதுமாக தூர்வாராமல் அறைகுறையாகவே தூர்வாரப்படுகிறது. அவ்வாறு 15 நாட்களுக்கு ஒரு முறை தூர்வாரப்படும் சாக்கடை கழிவுகள் முறையாக அகற்றப்படுவதில்லைஇதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. பெரியதோட்டம் பகுதியில் உள்ள 9 வீதிகளிலும் சாலையின் இரண்டு புறங்களிலும் சாக்கடை கழிவுகள் கார்கிரீட் சாலைகளின் சிதிலங்கள் என்று குப்பை மேடுகளாய் உள்ளது. இதனால் கொசுக்கள் அதிகமாகி மழைகாலங்களில் நோய்கள் பரவும் அபாயமாகவும் உள்ளது. அவற்றை சுத்தம் செய்ய வலியுறுத்தி பல மாதங்களாக மக்கள் கோரிக்கை வைத்தும் 50 வது வார்டு மாமன்ற உறுப்பினர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எங்கள் வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களின் அன்றாட குடிநீர் தேவைக்கு சப்பை நீர் மட்டுமே பெரும்பாலும் விநியோகம் செய்யப்படுகிறது. 15 அல்லது 20 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே நல்ல தண்ணீர் குடிப்பதற்காக விநியோகிக்கப்படுகிறது. வாரம் ஒரு முறை நல்ல தண்ணீர் விநியோகம் செய்ய வேண்டும் என பல முறை கோரிக்கை வைத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எங்கள் இந்த வார்டுக்கு உட்பட்ட புஷ்பா நகர், அண்ணாநகர், காங்கயம் பாளையம் புதூர், குமாரசாமி காலனி , ஆகிய பகுதிகளில் உள்ள சாலைகள் 5 ஆண்டுகளுக்கு மேலாக முழுவதுமாக சேதமடைந்து குண்டும் குழியுமாகவே இருக்கிறது. வாகண ஓட்டிகள் அதிக அளவில் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.
எங்கள் வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் சுத்தீகரிப்பு ( ஆரோ வாட்டர்) நிலையம் பெரியதோட்டம் 3வது வீதி, பெரியதோட்டம் 5 வது வீதி, புதுக்காடு 1வது வீதி போன்ற பகுதிகளில் பல ஆண்டுகளாக மக்கள் பயன்பாட்டுக்கு இல்லாமல் வீணாக இருக்கிறது. குறிப்பாக பெரியதோட்டம் 3வது வீதியில் அமைக்கப்பட்டுள்ள RO வாட்டர் கட்டிடத்தால் அப்பகுதி மக்கள் போக்குவரத்து இடையூறுக்கு உள்ளாகிறார்கள்.
பெரியதோட்டம் 1 வது வீதியில் உள்ள அரசு கட்டண கழிப்பறைக் கட்டிடம் சமூகவிரோதிகளின் கூடாரமாக இருந்து வருகிறது. தமிழக அரசால் தடைசெய்யப்ட்ட போதை பொருட்களின் விற்பனை கூடமாக இருந்து வருகிறது. பொதுமக்கள் பயன்பாடுகளின்றியும் முறையான பராமரிப்பு இன்றியும் ஆபத்தான நிலையில் இருக்கும் அந்த கட்டண கழிப்பறையை அகற்ற வேண்டும். மக்கள் பல ஆண்டுகளாக கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எங்கள் வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் சேகரிக்கும் குப்பைகள் முழுவதையும் அண்ணா நகர் பொதுமக்கள் வசிப்பிடத்திற்கு அருகில் நொய்யல் ஆற்று பாலத்தின் மீது கொட்டி துப்புறவு பணியாளர்கள் தீவைத்து எரிக்கிறார்கள் . இதனால் ஏற்படும் காற்று மாசுபாட்டால் அண்ணா நகர் பகுதியில் உள்ள பொதுமக்கள் பெரிதும் பாதிப்புக்கு ஆளாகி வருகிறார்கள். குழந்தைகள் முதியோர்களும் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். அதே போல புதுக்காடு பகுதியை ஒட்டியுள்ள நொய்யல் ஆற்றங்கரையில் அதிகமான குப்பைகளை கொட்டி மலைபோல் குவித்து வைத்திருக்கிறார்கள். இதனால் அப்பகுதி மக்கள் சுகாதார சீர்கேடுகளால் பல்வேறு நோய்களுக்கு உள்ளாகிறார்கள். புதுக்காடு மெயின் வீதியில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையால் அங்கு தினமும் குடித்து விட்டு சமூகவிரோதிகள் செய்யும் அட்டூழீயங்களால் எங்கள் வார்டு பொதுமக்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.. டாஸ்மாக் கடைக்கு மிக அருகிலேயே கோவிலும், குழந்தைகளுக்கான அரசு துவக்க பள்ளியும் இருப்பதால். டாஸ்மாக் கடைக்கு வருபவர்கள் மூலமாக பெண்களும் குழந்தைகளும் அன்றாடம் அச்சத்துடனே அந்த பகுதியை கடக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். ஆகவே பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாகவும் கோவிலுக்கு அருகில் இருப்பதாலும் உடனடியாக அந்த டாஸ்மார்க் கடையை அகற்றி வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்.
திருப்பூர் மாநகராட்சியின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் எங்கள் வார்டுக்கு உட்பட்ட பெரியதோட்டம் , குமாரசாமி காலணி, புஷ்பா நகர், காங்கயம் பாளையம் புதூர் ஆகிய பகுதிகளில் காண்கிரீட் சாலைகள் அமைத்து தர வேண்டும்.
புதுக்காடு 4 வது வீதிக்கு அருகில் உள்ள பி.வி.பி. மெட்ரிகுலேஷன் பள்ளிக்கு வெளியே உள்ள குப்பை தொட்டியில் எப்போதுமே குப்பைகளை தூர்வாராமல் இருப்பதால் 24 மணி நேரமும் மோசமான துர்நாற்றத்தோடு கடந்து செல்லும் அவல நிலையில் பொதுமக்களும்/ பள்ளி மாணவர்களும் உள்ளாவதால். அங்கு உள்ள குப்பை தொட்டியை வேறு இடத்திற்கு மாற்றியமைக்கப்பட வேண்டும்.
நரிக்காடு பகுதிக்கு அருகில் அமைந்துள்ள கோவில் மண்டபத்திற்கு அருகே உள்ள பாலத்தின் மீது அதிகமான குப்பைகள் கொட்டப்படுவதாலும், அதை முறையாக சுத்தம் செய்யாததாலும் வழிபாட்டு தளங்களுக்கு வரும் பக்தர்கள் மோசமான துர்நாற்றத்தால் அசௌகரியமான நிலைக்கு ஆளாகிறார்கள். கோவில்களின் கண்ணியத்தை கருத்தில் கொண்டு அந்த பகுதியில் உடனடியாக குப்பை தொட்டியை வைத்து தினமும் அதை முறையாக சுத்தம் செய்திட வேண்டும மேலும் அண்ணாநகர், புதுக்காடு, புஷ்பாநகர் குமாரசமி காலணி, காங்கயம் பாளையம் புதூர், பாலாஜி நகர் ஆகிய பகுதிகளில் அதிகமான தெருநாய்கள் சுற்றிவருகிறன. இரவு நேரங்களில் வாகனங்களில் வருபவர்களை துரத்துவதால் விபத்துக்கள் ஏற்படுகிறது. தெருநாய்களால் குழந்தைகளும் பெண்களும் அச்சத்தோடு நடக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதை குறித்து 50 வது வார்டு கவுன்சிலரிடம் பல முறை புகார் செய்தும் எந்த நடவடிக்கையும்ந எடுக்கவில்லை.
தமிழக அரசு குப்பை வரி மற்றும் சொத்து வரி உயர்வு அறிவிப்பை அறிவித்துள்ள நிலையில் ஏழ்மையானவர்களும், நடுத்தர வர்க்கத்தினரும் அதிக அளவில் உள்ள திருப்பூர் மாவட்ட பொதுமக்கள் அதிகமாக பாதிக்கப்படுவார்கள். திருப்பூர் மாநகராட்சியின் அதிகப்படியான சொத்து வரி உயர்வால் ஏழை, எளிய மக்களின் வீடுகளுக்கு வாடகை அதிகமாகும் நிலையை அச்சத்தோடு எதிர் நோக்குகிறார்கள். அதே போல கடை, வணிக அலுவலகங்களின் வாடகையும் அதிகமாகும் அபாயத்தால் நடுத்தர வர்க்க தொழிலாளர்களும் வியாபாரிகளும் அதிக அளவில் பாதிப்புக்கு உள்ளாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே திருப்பூர் மாநகராட்சியின் சொத்துவரி உயர்வு அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.
எங்கள் வார்டு பகுதியில் மேற்கண்ட அனைத்து பிரச்சனைகளும் பல ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் இருக்கிறது. மேலும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அடிப்படை கட்டமைப்புகளை உடனே செய்து தர வேண்டும் பொதுமக்கள் பல முறை 50 வது வார்டு மாமன்ற உறுப்பினரிடமும், மாநகராட்சி மேயர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எங்கள் பகுதியில் அடிப்படை பிரச்சனைகளுக்கு தீர்வை அவர்கள் தராததால் மாநகராட்சி ஆணையர் தக்க நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக