திருமங்கலத்தில் தெற்கு மாவட்ட திமுக சார்பில் 500க்கும் மேற்பட்டோர் தமிழக ஆளுநரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 7 ஜனவரி, 2025

திருமங்கலத்தில் தெற்கு மாவட்ட திமுக சார்பில் 500க்கும் மேற்பட்டோர் தமிழக ஆளுநரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

 

IMG_20250107_185844_661

திருமங்கலத்தில் தெற்கு மாவட்ட திமுக சார்பில் 500க்கும் மேற்பட்டோர் தமிழக ஆளுநரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் -  தமிழ்நாட்டையும், தமிழ் மக்களையும் , மரபையும் கொச்சைப்படுத்தும் வகையில் நடந்து கொண்ட ஆளுநரை பதவியை விட்டு வெளியேற்றவும், தமிழகத்தை விட்டு வெளியேற்றவும் கண்டன கோஷம்.



மதுரை மாவட்டம் திருமங்கலம் ராஜாஜி சிலை முன்பு , மதுரை தெற்கு மாவட்ட திமுக சார்பில் 500க்கும் மேற்பட்ட திமுகவினர் , தமிழக ஆளுநர் ஆர் என் ரவியைக் கண்டித்து, கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த வருட முதல் சட்டப்பேரவை கூட்டத்தில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை துவங்கிய போது, அதனை அவமதிக்கும் வகையில் வெளியேறிய தமிழக ஆளுநரை பதவி நீக்கம் செய்யப் கோரியும், அவரை நாட்டை விட்டு வெளியேற்றவும், ஆர்ப்பாட்டத்தில் கண்டன கோஷம் எழுப்பினர்.
    

தமிழ் நாட்டையும் , தமிழக மக்களையும் /தமிழ் மரபையும் அவமதிக்கும் வகையில் நடந்து கொண்ட ஆளுநர் ரவியை ஒன்றிய அரசு உடனடியாக பதவி நீக்க செய்ய வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் கோஷமிட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad