அமெரிக்காவின் 47 ஆவது அதிபராக இரண்டாம் முறை பதவியேற்றார் டிரம்ப் (78).
உலகமே ஆவலுடன் எதிர்பார்த்த அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவடைந்து வெற்றி பெற்று அமெரிக்காவின் 47 ஆவது அதிபராக தனது 78 ஆவது வயதில் பதவியேற்றார் டொனால்ட் டிரம்ப் அவர்கள்.
உலக நாடுகள் அனைத்தும் வாழ்த்துக்கள் கூறியது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்தார். தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
அவர் பதவியேற்ற பின் உறையில்......
அமெரிக்காவை இதற்கு முன் இல்லாத வகையில் முன்னேற்றுவேன்.
அமெரிக்காவை பாதுகாப்பதில் முக்கியத்துவம் கொடுப்பேன். சட்டத்திற்கு உட்படாத குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கப்படும். இவை அனைத்தும் இன்று முதல் நடைமுறைக்கு வருகின்றன. இந்த நிமிடம் முதல் அமெரிக்காவின் பின்னடைவுகள் நிறைவுக்கு வருகின்றன.
அமெரிக்காவை முழுமையாக கட்டமைப்போம் அமெரிக்காவின் பொற்காலம் இன்று தொடங்கியது என தெரிவித்தார்.
அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றுக் கொண்ட டொனால்ட் டிரம்ப் அவர்களுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்கள் கலந்துகொண்டார். அவருக்கு முன் வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டது இந்தியாவின் அனைத்து மக்களுக்கும் பெருமையாகும்.
சாதனைக்கும் ஆளுமைக்கும் வயது தடையல்ல என்பதை இளம் தலைமுறையினர் உனர வேண்டும் என்பது தமிழக குரலின் கருத்தாகும்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக