வேலூர் மாவட்டம், விருஞ்சிபுரம் காவல் நிலையத்தில் 445.74 கிலோ, புகையிலைப் பொருட்கள் பறிமுதல் இருவர் கைது போலீஸ் விசாரணை! - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

வெள்ளி, 31 ஜனவரி, 2025

வேலூர் மாவட்டம், விருஞ்சிபுரம் காவல் நிலையத்தில் 445.74 கிலோ, புகையிலைப் பொருட்கள் பறிமுதல் இருவர் கைது போலீஸ் விசாரணை!


 அணைக்கட்டு , ஜன 31 -
வேலூர் மாவட்டத்தில் அணைக்கட்டு பகுதியில் சட்டவிரோதமாக் போதைப்பொருட்கள் விற்பவர்கள் மற்றும் கடத்துபவர்களை தடுக்க, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நா.மதிவாணன் அவர்கள், பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், இன்று 31.01.2025-ம் தேதி, அணைக்கட்டு உட்கோட்டம், விருஞ்சிபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், சட்டவிரோதமாக புகையிலைப் பொருட்கள் கடத்தப் படுவதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், மாவட்ட குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர்  திருநாவுகரசு (பொறுப்பு) அவர்களின் தலைமையில், விருஞ்சிபுரம் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, பெங்களூரில் இருந்து சென்னைசெல்லும் தேசிய நெடுஞ்சாலை வல்லன்றம் சந்திப்பில் வாகன சோதனை மேற்கொண்ட போது அவ்வழியாக வந்த PY 01 VP 8277, Mahindra என்ற நான்கு சக்கர வாகனத்தில் சட்டவிரோதமாக விற்பனைக்காக கடத்தி கொண்டு வரப்பட்ட, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட, 445.74 கிலோ கிராம் புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, எதிரிகள் 1.பிரதாப் ராம் (வயது 32, )த/பெ வீர்மா ராம், ராஜஸ்தான், 2. உத்தம்குமார் (வயது 25)த/பெ மானோகரம், ராஜஸ்தான் என்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. என்பதை மாவட்ட காவல்துறையின் சார்பாக தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad