திருப்பூர் 42வது வார்டு ரேசன் கடைகளில் வழங்கப்படும் பொங்கல் தொகுப்பினை மாநகராட்சி எதிர் கட்சி தலைவர் அன்பகம் திருப்பதி ஆய்வு செய்தார் - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 12 ஜனவரி, 2025

திருப்பூர் 42வது வார்டு ரேசன் கடைகளில் வழங்கப்படும் பொங்கல் தொகுப்பினை மாநகராட்சி எதிர் கட்சி தலைவர் அன்பகம் திருப்பதி ஆய்வு செய்தார்

IMG-20250110-WA0003

திருப்பூர் மாநகராட்சி 42 வது வார்டுக்கு உட்பட்ட கே வி ஆர் நகர், செல்லம் நகர், செங்குந்தபுரம் உள்ளிட்ட அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கல் பரிசு வழங்குவதை  மாமன்ற உறுப்பினர், திருப்பூர் மாநகராட்சி எதிர் கட்சி தலைவர் அன்பகம் திருப்பதி அவர்கள் ஆய்வு செய்ய சென்றார் அப்போது அவரிடம் பொதுமக்கள் பொங்கல் பரிசுத்தொகுப்பில்  ரூபாய் ஆயிரம் வழங்காததையும் வழங்கப்பட்ட பொங்கல் பரிசு பொருள்களின் தரம் மிகவும் குறைவாக இருப்பதையும் வேதனையுடன் கூறினர். அப்போது அன்பகம் திருப்பதி அவர்கள் தலைமையில் அஇஅதிமுக நிர்வாகிகள் எடப்பாடியாரின் ஆட்சியில் வழங்கப்பட்ட பொருள்களின் மதிப்பையும் தரத்தையும் எடுத்துக் கூறி துண்டு பிரசுரங்கள் வழங்கி அவர்களுக்கு 2026 ஆம் ஆண்டு எடப்பாடியார் ஆட்சி அமைந்த உடன் உங்கள் பரிசுத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறிய போது மக்கள் எடப்பாடியார் ஆட்சி அமைய உறுதுணையாக இருப்போம் என கூறினர்.

மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் 

தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad