பேராவூரணியில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 4 பேர் கைது , 75 கிலோ பறிமுதல்,ரூ1 லட்சம் அபராதம் - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

வெள்ளி, 24 ஜனவரி, 2025

பேராவூரணியில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 4 பேர் கைது , 75 கிலோ பறிமுதல்,ரூ1 லட்சம் அபராதம்

IMG-20250124-WA0097

பேராவூரணியில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 4 பேர் கைது , 75 கிலோ பறிமுதல்,ரூ1 லட்சம் அபராதம் 


தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 4 பேரை கைது செய்த போலீசார் 75 கிலோ எடையுள்ள புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்து ரூ.1 லட்சம் அபராதம் விதித்தனர். 


 பேராவூரணி பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த புகாரின் பேரில், உணவுப் பாதுகாப்புத்துறையினர் தொடர் சோதனை நடத்தி வருகின்றனர்.


இந்நிலையில் பழைய பேராவூரணி தனியார் கல்லூரி அருகே பெட்டிக்கடை ஒன்றில் பேராவூரணி போலீசார் சோதனை மேற்க்கொண்டபோது பாண்டிக்கண்ணு ( 59) மற்றும் அவருடைய மகன் பழனிகுமார் ( 28) ஆகிய இருவரும் கடையில் பதுக்கி வைத்து ஹான்ஸ், கூல் லிப் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது தெரியவந்து அவர்களிடமிருந்து 15 கிலோ புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்து ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.


இதேபோல், பேராவூரணி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள சின்னையா என்பவரது கடையில் சோதனையிட்ட போலீசார் ஹான்ஸ், பான்பராக் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் 60 கிலோவை பறிமுதல் செய்து சின்னையா (  62)  அவரது மகன் சரவணக்குமார் ( 23) ஆகியோரை கைது செய்து ஏற்கனவே விற்பனை செய்தது கண்டறியப்பட்டதால் ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது .மேலும் கடைவீதியில் முத்துராமன் என்பவர் கடையில் சோதனையிட்டதில் 10 ஹான்ஸ் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு அவருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு தொடர்ந்து விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட 4 பேரும் பேராவூரணி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிபதி அழகேசன் உத்தரவின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டனர்.


இதையடுத்து விற்பனை செய்த இரண்டு கடைகளை உணவு பாதுகாப்பு துறை அலுவலர் வேல்முருகன் 15 நாட்களுக்கு பூட்டி சீல் வைத்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad