தூத்துக்குடி மாவட்டத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் ஓரே காவல் நிலையத்தில் பணியாற்றிய காவல்துறையினர் இதற்கு முன்பு பணியாற்றிய காவல் நிலையங்களில் அவர்கள் செய்த பணியின் அடிப்படையிலும்,
இதற்கு முன்பு அவர்கள் எந்தெந்த காவல் நிலையங்களில் பணியாற்றியுள்ளனர் என்பதன் அடிப்படையிலும் இன்று (11.01.2025) சம்மந்தப்பட்ட காவல்துறையினர் அனைவரையும் மாவட்ட காவல்துறை அலுவலகத்திற்கு அழைத்து, அவர்களிடம் நேரடியாக கேட்டு,
காவல் நிலையங்களில் உள்ள பணியிடங்களுக்கு ஏற்ப அவர்கள் விருப்பப்பட்ட இடங்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் இன்று பொது மாறுதல் வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து உட்கோட்ட காவல் நிலையங்களில் 3 ஆண்டுகள் பணி முடித்த இரண்டாம் நிலை காவலர்கள் முதல் சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் வரையுள்ளவர்கள் என 256 பேர் கொண்ட பொதுமாறுதல் பட்டியல் தயார் செய்யப்பட்டு இன்று (11.01.2025) கலந்தாய்வுக்கூட்டம்
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் ஆறுமுகம், மாவட்ட காவல் அமைச்சு பணி நிர்வாக அதிகாரி ராமசுப்பிரமணிய பெருமாள், அலுவலக கண்காணிப்பாளர்கள் ஆகியோர் அடங்கிய குழுவினர் முன்பு நடைபெற்றது.
இக்குழுவின் மூலம் காவல்துறையினரின் விருப்பங்களை நேரடியாக கேட்டறிந்து காவல் நிலையங்களில் ஏற்கனவே காலிப்பணியிடங்கள் மற்றும் தற்போது மாறுதலாகி செல்லும் காலிப்பணியிடங்களையும் கணக்கிட்டு அவர்களின் விருப்பத்திற்கேற்ப பணி மாறுதல் வழங்கி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக