முக்கூடல் பழைய பேருந்து நிலையம் அருகில் கடைகள் அகற்றம், இது குறித்து தமிழ்நாடு வணிகர் சங்கம் சார்பில் அரசுக்கு அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
முக்கூடல் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள 60 வருடங்களாக செயல்பட்டு வரும் வணிக நிறுவனங்களான மளிகை கடைகள் மருந்தகங்கள் பெட்டி கடைகள் பழக்கடைகள் கோழி இறைச்சி கடை போன்ற மக்கள் தினசரி பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களின் கடைகளை,
அரசு அதிகாரிகள் ஈ.வு இரக்கமின்றி இடித்துதள்ளி முப்பது வியாபாரிகள் அவர்களை சார்ந்த சுமார் நூற்றி ஐம்பது பேர்களின் வாழ்வாதாரத்தில் மண்ணை அள்ளி போட்டுள்ளனர். கடை லைசென்ஸ், உணவு பாதுகாப்பு துறை அனுமதி லைசென்ஸ், வணிக வரி துறை லைசென்ஸ் இடத்திற்கு பதிவு செய்த பத்திரம் மற்றும் பட்டா மின் இணைப்பு போன்றவை எல்லாம் வைத்துள்ளனர்.
கடைக்கு வரியாக ஒரு வாரத்திற்கு முன்னர்கூட பஞ்சாயத்து தீர்வை கட்டிய ரசீது வைத்துள்ளனர். இத்தனை இருந்தும் நாங்கள் கட்டும் வரி முலமாக செயல்படும் அரசு எங்கள் வணிகர்களுக்கு மாற்று இடம் கூட வழங்காமல் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கி விட்டு வேடிக்கை பார்க்கிறது.
G.S.T போன்ற கொடுமையான வரியிலிருந்து மீண்டு வரமுடியாமல் தவிக்கும் வணிகர்களை மீண்டும் மீண்டும் அரசு நடவடிக்கை என்ற போர்வையில் செயல்படுவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது சிறு குறு வணிகர்களை சொந்த மண்ணில் அகதியாக்கிவிட்டு கார்ப்ரேட் கம்பெனிகளை வாழ வைக்க அரசே வழிவகை செய்வது போல் உள்ளது.
தமிழ்நாடு வணிகர் சங்கத்தின் சார்பாக அரசுக்கு எச்சரிக்கை உணர்வோடு தெரிவித்திருக்கிறோம் பாதிக்கபட்ட முப்பது வியாபாரிகளுக்கும் உடனடியாக மாற்று இடமும், பொருட் சேதமடைந்த முப்பது வணிகருக்கும் நஷ்ட ஈடும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் தமிழகம் தழுவிய வணிக போராட்டம் வெடிக்கும் என அரசுக்கு எச்சரிக்கிறோம்.
குறிப்பு :
(இப்போது இருக்கும் பேருந்து நிலையம் அடுத்து கட்ட இருக்கும் காய்கறி சந்தை இடிக்கபட்ட வணிகர்களின் கடை இருக்கும் இடம் எல்லாம் ஒரே சர்வே நம்பர் தான் 69/3B1 என்பது குறிப்பிடதக்கது), என குறிப்பிட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக