போலி பாஸ் மூலம் சட்டவிரோதமாக கனிமவளம் எடுத்து சென்ற 2 பேர் கைது, சிறை இரண்டு வாகனங்கள் பறிமுதல்....
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்படி கேரளா மாநில எல்லை பகுதிகளில் கூடுதலாக போலீசார் நியமிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கொல்லங்கோடு காவல் நிலைய போலீசார் செங்கவிளை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது போலி பாஸ் பயன்படுத்தி சட்டவிரோதமாக கனிமவளம் ஏற்றி வந்த 2 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் வாகன ஓட்டுநர்களான கேரளா மாநிலம், கொல்லம், வாழியோடு பகுதியை சேர்ந்த ராஜன் என்பவரின் மகன் ராஜேஷ்(34), ஆயூர் பகுதியை சேர்ந்த சுரேந்திரன் என்பவரின் மகன் சுஜித்(40) ஆகியோர் மீது கொல்லங்கோடு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர் . இந்த நடவடிக்கையானது வரும் நாட்களில் மேலும் தீவிர படுத்தப்படும்.
கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர் என்.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக