பேர்ணாம்பட்டு ,ஜன 21-
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அரவட்லா கிராமத்தில் இன்று (ஜனவரி 21) அதிகாலை பட்டாபி என்பவரின் விவசாய நிலத்தில் புகுந்த 2 காட்டு யானைகள் அங்குள்ள தென்னை மரக்கிளைகளை உடைத்து சேதப்படுத்தியது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த விவசாயிகள் பேர்ணாம்பட்டு வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் விரைந்து வந்து வனத்துறையினர் பொதுமக்கள் உதவியுடன், பட்டாசுகள் வெடித்து காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக