குடியாத்தம் ஜன 24 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் மோட்டார் சைக்கிள் விபத்தில் கல்லூரி மாணவர்கள் 2-போ் உயிரிழப்பு
குடியாத்தம் டவுன் பிச்சனூர் ஆர்வி கோபால் தோப்பு தெரு பகுதியை சேர்ந்தவர் பாலாஜி இவரது மகன் பிரதீப் (வயது 18) குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரியில் பிகாம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தவர்
பிச்சனூர் நரி குள்ளப்ப முதலி தெருவை சேர்ந்தவர் ஜெகநாதன் இவரது மகன் கோபி ராம் (வயது 18) கோயம்புத்தூரில் உள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தவர் நண்பர்களான பிரதீப் மற்றும் கோபி ராம் ஆகிய இருவரும் நேற்று இரவு காட்பாடி சாலை ஆசிரியர் காலனி அருகே மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருக்கும்போது முன்னாள் சரக்கு வாகனம் செல்வதை கண்டதும் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த கோபி ராம் திடீரென பிரேக் போட்டு உள்ளார்
இதனால் மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள் ஆனது
இதில் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்திருந்த பிரதீப் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்
இதில் படுகாயம் அடைந்த கோபி ராம் வேலூரில் உள்ள தனியார் மருத்துவ மனை சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டார் சிகிச்சை பலனின்றி இன்று காலை 9-45 மணிக்கு உயிரிழந்தார்
விபத்தை குறித்து தகவல் அறிந்ததும் நகர காவல் ஆய்வாளர் பார்த்தசாரதி போக்குவரத்து காவல் ஆய்வாளர் முகேஷ் குமார் கிராமிய காவல் ஆய்வாளர் சாந்தி உதவி ஆய்வாளர் வீராசாமி ஆகியோர் சம்பவத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்குமாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இது சம்பந்தமாக நகர போலீசார் வழக்கப் பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக