சிவகங்கையில் வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களின் 295வது பிறந்தநாளை முன்னிட்டு அமைச்சர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை.
சிவகங்கை மாவட்டம் சிவகங்கையில் உள்ள வீரமங்கை வேலுநாச்சியார் நினைவு மண்டபத்தில் வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களின் 295-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவர்கள் திருவுருவ சிலைக்கு மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு கே. ஆர். பெரியகருப்பன் அவர்கள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்வில் மாண்புமிகு முன்னாள் அமைச்சர் மு. தென்னவன், திமுக மாவட்ட துணை செயலாளர் செங்கைமாறன், மானாமதுரை நகர் கழக செயலாளர் க. பொன்னுசாமி, மாண்புமிகு முன்னாள் அமைச்சர் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி தமிழரசிரவிக்குமார், காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ். மாங்குடி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மானாமதுரை நகர் மன்ற தலைவர் எஸ். மாரியப்பன் கென்னடி, சிவகங்கை மாவட்ட ஆட்சியர் திருமதி ஆஷா அஜித் இ.ஆ.ப, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவீன், மாவட்ட நகர ஒன்றிய வட்டார பேரூர் மற்றும் ஊராட்சிகளை சேர்ந்த திமுக, காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகளின் அனைத்து துறை, பிரிவு மற்றும் அணிகளை சேர்ந்த முன்னாள் மற்றும் இந்நாள் நிர்வாகிகள், பிரமுகர்கள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக