குடியாத்தம் ,ஜன 28 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வனவிலங்கு தொல்லையிலிருந்து விவசாயிகளை பாதுகாப்பு கேட்டு சிறுத்தை தாக்குதலால் உயிரிழந்த கே வி குப்பம் தாலுகா துருகம் கிராமத்தை சேர்ந்த கல்லூரி மாணவி செல்வி அஞ்சலி அவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 25 லட்சம் நிவாரணம் கோரி மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை தமிழக அரசு சார்பில் வழங்க கோரி மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வேலூர் மாவட்டம் கே வி குப்பம் தாலுக்கா துருகம் கிராமத்தில்
கிராமத்தில் 2 மாதங்களுக்கு முன்பு B.Com படிக்கும் மாணவி அஞ்சலி என்கிற மாணவியை சிறுத்தை கடித்து சாகடித்தது.மாதங்கள் 2 முடிந்தும் உரிய நட்ட ஈடு கிடைக்கவில்லை... உரிய இழப்பீடு உடனடியாக வாங்கவேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்து இன்று கே.வி.குப்பத்தில் த.நா. விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வனத்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்துள்ளனர். வேலூர் மாவட்ட துணை தலைவர் கோபால் ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.ஆதன் மாநில செயலாளர் பி. துளசி நாராயணன், மாவட்ட நிர்வாகிகள் சி.எஸ்.மகாலிங்கம், கே.சுவாமிநாதன், ஜி.நரசிம்மன், எஸ்.ஏகலைவன் உட்பட பலர் பங்கேற்றனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக