2025 வருடத்திற்கான தாமிரபரணி நதியோர பறவைகளுக்கான கணக்கெடுப்பு திருநெல்வேலி தூத்துக்குடி தென்காசி ஆகிய மாவட்டங்களில்தொடங்கியது. - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

ஞாயிறு, 26 ஜனவரி, 2025

2025 வருடத்திற்கான தாமிரபரணி நதியோர பறவைகளுக்கான கணக்கெடுப்பு திருநெல்வேலி தூத்துக்குடி தென்காசி ஆகிய மாவட்டங்களில்தொடங்கியது.

2025 வருடத்திற்கான தாமிரபரணி நதியோர பறவைகளுக்கான கணக்கெடுப்பு திருநெல்வேலி தூத்துக்குடி தென்காசி ஆகிய மாவட்டங்களில் தொடங்கியது.

ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியாவிலிருந்து நீலச்சிறகு வாத்து நம்ம ஊரு வேய்ந்தான் குளத்திற்கு வந்து விட்டது. அது மட்டுமா எவரெஸ்ட் சிகரத்தைக் கடந்து வரித்தலை வாத்து விஜய நாரயணம் குளத்தில் முகாமிட்டுள்ளது. 

தூத்துக்குடி பெருங்குளத்தில் நீளமான அலகைக் கொண்ட ஐரோப்பா தேச பறவையான கருவால் மூக்கன் சுறு சுறுப்பாக இரை தேடிக் கொண்டிருக்கிறது. ஏன் இந்த பறவைகள் நம் ஊருக்கு வருகின்றன? என்ன வகையான பறவைகள் நம் குளங்களில் காணப்படுகின்றன? 

பொதுவான பறவைகள் எவை? மற்றும் அரிதான பறவைகள் எவை? என்ற பல்வேறு கேள்விகளுடன் இந்த வருட கணக்கெடுப்பு பணி அதாவது பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து 15வது தாமிரபரணி பறவைகள் கணக்கெடுப்பில். திருநெல்வேலி மாவட்ட பசுமைக் குழு, முத்து நகர் இயற்கை அமைப்பு, தூத்துக்குடி, நெல்லை இயற்கைச் சங்கம், திருநெல்வேலி, தமிழ்நாடு அறிவியல் இயக்கம், தென்காசி மற்றும் ஈக்கோ ஜெசியூட், மதுரை ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து

மணிமுத்தாறில் இயங்கி வரும் அகத்தியமலை மக்கள்சார் இயற்கைவள காப்பு மையம் . இக்கணக்கெடுப்பில் கலந்து கொள்ள உள்ளவர்களுக்கு 24ம் தேதி மதியம் 2.30 மணிக்கு கணக்கெடுப்பு குறித்த பயிற்சி வழங்கப்பட்டது . 

திருநெல்வேலியில் பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியிலும், தூத்துக்குடியில் சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல் நிலைப் பள்ளியிலும், தென்காசி மாவட்டத்தில் இலஞ்சி டிடி டி ஏ டி.எஸ். டேனியல் ராஜம்மாள் பெண்கள் கல்வியியல் கல்லூரிலும் பயிற்சி வகுப்பு நடைபெற்றது 

அதனை தொடர்ந்து. கடந்த வருடங்களில் பயிற்சி வகுப்பு திருநெல்வேலியில் மட்டுமே நடைபெற்றது, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்ட மக்களின் பங்கேற்பை அதிகரிக்க இம்முறை அந்தந்த மாவட்டங்களில் நடைபெற்றது இன்று நடைபெற்ற கணக்கெடுப்பில் திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு குளங்களில் நடைபெற்றது

இதனைத் தொடர்ந்து இன்று நடைபெற்ற பறவைகள் கணக்கெடுப்பில் கலந்து கொண்ட செய்தியாளர் தங்கராஜ் இன்று நம்மிடம் கூறியது இன்று ராஜவல்லிபுரம் குளத்தில் சென்ற ஆண்டு இதே குளத்தில் வலையில் சிக்கிய நீர் காகம் உயிருடன் மீட்கப்பட்டது. 

உயிருக்கு போராடிய நீர் காலத்தை கடுமையான போராட்டத்திற்கு பிறகு உயிருடன் மீட்டு அதனை காப்பாற்றியது மிகுந்த மன மகிழ்ச்சியை தந்தது ஆனால் அதே குளத்தில் இன்று தற்போது அதே வகையான அதே மாதிரியான வலையில் சிக்கி உயிர் இழந்து இருப்பது மிகுந்த மன வேதனை அளிப்பதாக அவர் கூறினார் 

தற்போது அதிகப்படியான மாசுகளால் நீர் நிலையில் பாதிக்கப்படுகின்றது பறவைகள் பாதிக்கப்படுகின்றது என்பதை எடுத்துக் கூறினார் இன்று பறவைகள் கணக்கெடுப்பில் கலந்து கொண்ட பொதுமக்கள் கல்லூரி மாணவர்களின் இடையே அதனால் ஏற்படும் பிளாஸ்டிக் கழிவுகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது 

மக்கள் பயன்படுத்தும் பிளாஸ்டிக் கழிவுகளால் நீர் நிலைகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றது என்பது நம்மிடம் எடுத்துக் கூறினார்.

திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் தங்கராஜ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad