காவல்துறை மற்றும் பழைய இருசக்கர வாகன வியாபாரிகள் சங்கம் சார்பில் சாலை பாதுகாப்பு மாதம் 2025 விழிப்புணர்வு பேரணி!
குடியாத்தம் , ஜன 9 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் புதிய பஸ் நிலையம் அருகில் போக்குவரத்து காவல்துறை மற்றும் பழைய இரு சக்கரவ வியாபாரிகள் சங்கம் இணைந்து நடத்தும் சாலை பாதுகாப்பு பேரணி இன்று மாலை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு இருசக்கர வியாபாரிகள் சங்க தலைவர் ரமேஷ் செயலாளர் விஜயகுமார் பொருளாளர் வெங்கடேசன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள்
துணைத் தலைவர் ஜி முரளி துணை செயலாளர் செந்தில் துணைப் பொருளாளர் ஏ அய்யாத் பாஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர்
பேரணியை துவக்கி வைத்தல் காவல் துணை கண்காணிப்பாளர் டி .ராமச் சந்திரன் நகர காவல் ஆய்வாளர் டி பார்த்தசாரதி போக்குவரத்து வாகன ஆய்வாளர் எஸ் பி ராஜேஷ் கண்ணா
போக்குவரத்து காவல் ஆய்வாளர் டி முகேஷ் குமார் ஆகியோர் பேரணியை துவக்கி வைத்தனர் . இதில் பழைய இருசக்கர வாகன வியாபாரிகள் கலந்து கொண்டு முக்கிய வீதிகளில் பேரணியாக சென்றனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக