சின்மயா வித்யாலயா பதின்ம மேனிலைப்பள்ளியில் ஆண்டு விழா 2024
கோவை மாவட்டம் வடவள்ளியில் இயங்கி வரும் சின்மயா வித்யாலயா பதின்ம மேனிலைப்பள்ளியில் 24.12.24 அன்று மதியம் 2மணிக்கு பள்ளியின் ஆடிட்டோரியத்தில் விழா இனிதே துவங்கியது.
இந்த ஆண்டு விழாவில் சின்மயா மிஷனை சார்ந்தவர்களும், சின்மயா பள்ளிகளின் தாளாளர்களும், பள்ளியின் முதல்வரும் மற்றும் ஆர்.எஸ்.புரம் சின்மயா வித்யாலயா மற்றும் சின்மயா வித்யாலயா சிபிஎஸ்சி பள்ளியின் தலைமை ஆசிரியர்களும்,மற்றும் ஆசிரிய,ஆசிரியைகளும் கலந்து விழாவை சிறப்பித்தார்கள்.
இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு
வேளாண்மை பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் உயர்திரு.கீதாலட்சுமி அவர்கள் கலந்து சிறப்புரை ஆற்றி விழாவை சிறப்பித்தார்கள். இவ்விழாவிற்கு கௌரவ விருந்தினராக வாழ்க்கை முறை சுகாதார நிபுணர் உயர்திரு சில்பா ஷா அவர்களும் கலந்து விழாவை கௌரவப்படுத்தினார்கள்.
இவ்விழாவில் விளையாட்டு துறையில் சாதித்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
ஆண்டு அறிக்கை வாசிக்கப்பட்டது. பின்னர்
எல்.கே.ஜி குழந்தைகளின் நடனம் முதல் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களின் நடனம் வரை மிக அழகாக நடந்து முடிந்தது. இறுதியாக நாட்டுபண்ணுடன் விழா இனிதே நிறைவுற்றது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக