நெல்லையில் நாளை மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜாவின் பிரம்மாண்ட இன்னிசை கச்சேரி நடைபெற உள்ளது. இதற்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
நெல்லையில் ரெட்டியார் பட்டி இரட்டை மலை அருகே இடது பக்கம்... சாலையில் சென்றால் நங்கூரம் என்கிற வீடு அருகில்.... திறந்த வெளி மைதானத்தில் இளையராஜா கச்சேரி நடைபெறுகிறது.
இந்த விழாவில் பங்கேற்பதற்காக இசையமைப்பாளர் இளையராஜா இன்று 16.01.2024 மாலை நெல்லைக்கு வருகை தந்தார். அவருக்கு இசை நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுவினர் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இன்று நெல்லையில் தங்கி இருக்கும் அவர் நாளை இசை நிகழ்ச்சிகளை நடத்த உள்ளார்..
நெல்லை மாவட்ட செய்தியாளர் தங்கராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக