குடியாத்தம் ,ஜன 12 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் இந்து முன்னணி இளைஞர்களின் சார்பில் குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் அருகில் வீரத்துறவி சுவாமி விவேகானந்தர் அவர்களின் 162 வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு தேசிய இளைஞர் தினமாக கொண்டாடப்பட்டது இதில் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டனர் பின்பு அவருடைய திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்கள் தூவி கொண்டாடப்பட்டது பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது அதில் மாணவர்கள் கோஷங்கள் எழுப்பினர் மதுப் பழக்கத்தில் இருந்து மாணவர்களை வெளியேற்றவும் சுற்றுச்சூழலை பாதுகாத்து மரங்களை நடவும் சாலை விதிகளை பின்பற்றவும் உடல் உறுப்பு தானம் மற்றும் ரத்த தானம் செய்வது தொடர்பாக சிறப்பான கோஷங்கள் எழுப்பப்பட்டது இதில் இந்து இளைஞர் முன்னணி மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் ஜெகன் தலைமையில் நடைபெற்றது நகர செயலாளர்கள் ஹரி கோகுல் மற்றும் இந்து இளைஞர்கள் முன்னணி பொறுப்பாளர்கள் ஜீவா பூவரசன் பிரசன்னா ஆனந்த் ராம் ஜீவித் யோகேஷ் ஆதிகேசவன் அபினந்தம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக