ராமநாதபுரம் பயன்பாட்டில் இல்லாத பூங்காவிற்கு ரூபாய் 16 லட்சம் செலவு செய்த நகராட்சி நிர்வாகம்.
இராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகே அமைந்துள்ள எம்.எஸ்.குப்புச்சாமி நகராட்சி பூங்கா,இந்த பூங்கா கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாட்டில் இல்லாமல் வளர்ந்து விளையாட்டு சாதனங்களை செடிகள் ஆக்கிரமிப்பு செய்துள்ளது. இந்த பூங்காவிற்கு அருகே அரசு மதுபான கடை இயங்குவதால். இங்கு வரும் மதுப்பிரியர்கள் இதன் கேட் அருகே அமர்ந்து மது அருந்துகின்றனர்.
இதனால் பொதுமக்கள் பூங்காவிற்கு வருவது குறைந்தது. இதனால் பல ஆண்டுகளாக நகராட்சி பூங்கா பயன்பாட்டில் இல்லாமல் பூட்டியே உள்ளது. (கடந்த ஆண்டு2024) நகராட்சி நிர்வாகம் பூங்காவிற்கு வர்ணம் பூசி 16.லட்சம் ரூபாய் செலவு செய்து உள்ளதாக கடந்த 07.03.2024 அன்று திறக்கப்பட்டதாகவும் கல்வெட்டு பதிக்கப்பட்டுள்ளது.
திறக்கபடாமல் பூட்டி கிடக்கும் பூங்கா விற்கு நகராட்சி நிர்வாகம் ரூபாய் 16 லட்சம் செலவு செய்துள்ளதை சுட்டிக் காட்டி இராமநாதபுரம் நகர் பகுதிகளில் பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுவதாகவும் பழுதடைந்த சாலைகளை சரி செய்யாமல் உள்ளது இதனை நகராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளாமல் உள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக