நீலகிரி மாவட்டம் உதகையில் கடந்த 18ம் தேதி நமது எம். ஜி .ஆர் . பத்திரிகைச் செய்தியாளர் திரு. செந்தில்குமார் ஊட்டியில் பார்க்கிங் பகுதியில் கட்டண கொள்ளை என்ற தலைப்பில் செய்தி வெளியிட்ட தற்காக அந்த பார்க்கிங்ஒப்பந்ததாரர் மற்றும் சில ரவுடிகள் சேர்ந்து கடுமையாக தாக்கியுள்ளனர். இதனால் அவருடைய நெஞ்சு பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டு, அவர் ஊட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். தகவலறிந்த தமிழக பத்திரிக்கையாளர் சங்க பொதுச்செயலாளர் திரு. பாஷா அவர்கள் தமிழக பத்திரிக்கையாளர் சங்க குழுவில் தெரிவித்து உறுப்பினர்களுடன் மருத்துவமனைக்கு சென்று தாக்கப்பட்ட செய்தியாளரை சந்தித்து ஆறுதல் கூறியதுடன் சங்கம் துணை நிற்க்கும் என்று கூறியதுடன் உடன் அனைத்து சங்கங்களின் துணையை நாடி செந்தியாளர் செந்தில் கடுமையாக தாக்கப்பட்டதை கண்டித்து ஜனவரி 24 அன்று ஊட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் தமிழக பத்திரிகையாளர்கள் சங்கம், மற்ற பிற தோழமை சங்கங்களுடன் இணைந்து ஒரு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை முன்னின்று நடத்தியது. இந்த ஆர்ப்பாட்டத்தில் செய்தியாளர் தாக்கப்பட்டதை கண்டித்தும், செய்தியாளர்களுக்கு தேவையான பாதுகாப்பை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் போடப்பட்டது. தொடர்ந்து இது தொடர்பான மனு, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் வழங்கப்பட்டது. இந்த ஆர்பாட்டம் தமிழக பத்திரிகையாளர்கள் சங்க மாநில செயலாளர் திரு. A. பாஷா அவர்கள் தலைமையிலும், நீலகிரி மாவட்ட தலைவர் திரு.சகாயராஜா, மாவட்ட செயலாளர் திரு. ஜெரால்டு, மாவட்ட பொருளாளர் திரு.KSTமகேந்திரன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக பத்திரிகையாளர்கள் சங்கத்தின் அனைத்து நிர்வாகிகளும் உறுப்பினர்களும் மற்ற சங்கங்களின் பொறுப்பாளர்களும் என 150 க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர். தங்களது ஒற்றுமையை களத்தில் காண்பித்து செய்தியாளரை தாக்கப்பட்ட குண்டர்களில் ஒருவருக்கு மூன்று முதல் ஆறு வழக்குகள் உள்ளது என்றும் இதுபோன்ற தொடர் வழக்குகளில் ஈடுபட்டு வரும் குண்டர்கள் செய்தியாளரை தாக்கியதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்து அவர்களை கைது செய்தால் மட்டும் போதாது அவர்களை குண்டாஸ் சட்டத்தில் பதிவு செய்ய வேண்டும் என கோரிக்கையும் மாவட்ட ஆட்சியரிடம வைத்தனர்
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக