மதுரை பெருங்குடி பகுதியில் விவசாய நிலத்தில் சென்ற ரசாயன கழிவுநீரை பருகி 14 மாடுகள் உயிரிழப்பு.
மேலும் 70 மாடுகள் ரசயான கழிவுநீர் அருந்தியதில் உயிருக்கு போராடும் பரிதாப நிலை.
கால்நடைத்துறை மண்டல இயக்குனர் Dr.சுப்பையன் ,உதவி இயக்குநர்Dr.சரவணன் நோய்கள் புலானாய்வு பிரிவு Dr கிரிஜா தலைமையில் 18 பேர் கொண்ட மருத்துவ குழு சம்பவ இடத்தில் முகாம்.
மதுரை பெருங்குடி அருகே மேய்ச்சலுக்காக விவசாய நிலங்களில் விடப்பட்ட கிடை மாடுகள் விவசாய நிலத்தின் நடுவே சென்ற ரசாயன கழிவுநீரை பருகியதில் 14 மாடுகள் சம்பவ இடத்திலே உயிரிழந்தது.
மதுரை அவனியாபுரம் தர்மர் வில்லாபுரம் அசோக், குதிரை குத்தி அய்யனார், குரண்டி பெருமாள் உள்ளிட்ட ஆறு பேரின் 920 மாடுகள் பெருங்குடி மண்டேலா நகர் பகுதியில் மேய்ச்சலுக்கு விடப்பட்டது.
920 கிடை மாடுகள் மேய்ச்சலில் இருந்த போது விளை நிலத்தில் இருந்த ரசாயன கழிவு நீரை பருகியதில் 70 மாடுகள் பாதிப்படைந்துள்ளது.
இதில் பதினான்கு (14) மாடுகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளது.
இதுகுறித்து கால்நடை மருத்துவரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த கால்நடை துறை மண்டல இணை இயக்குனர் சுப்பையன், உதவி இயக்குனர் சரவணன், நோய்கள் புலனாய்வு பிரிவு மருத்துவர் கிரிஜா, அவனியாபுரம் கால்நடை மருத்துவர் பாபு உள்ளிட்ட 18 பேர் கொண்ட குழு இறந்த மாடுகளை உடல் கூறு ஆய்வு செய்து அருகிலுள்ள நிலத்தில் ஜேசிபி உதவியுடன் 8 ஆடி குழி தோண்டி புதைக்கப்பட்டது.
வருவாய் துறை சார்பாக தெற்கு தாசில்தார் ராஜபாண்டி கிராம நிர்வாக அலுவலர் கணேசன் உள்ளிட்டோர் நேரில் ஆய்வு செய்தனர்.
விளைநிலங்களில் தேங்கிய ரசாயன நீரை குடித்ததில் 14 மாடுகள் இறந்ததால் மதுரை பெருங்குடி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக