தூத்துக்குடி- பாளையங்கோட்டை ரோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் நேற்று பொங்கல் விழா நடந்தது. விழாவில் பங்கேற்ற மாணவர்கள் ஒரே நிறத்தில் ஆடை அணிந்திருந்தனர்.
விழா முடிந்ததும் மாணவர்கள் கல்லூரியின் முன்பாக சாலையில் மோட்டார் சைக்கிளில் வட்டமடித்து சாகசத்தில் ஈடுபட்டனர். போக்குவரத்து விதிகளை மீறி, அதிக ஒலி எழுப்பும் சைலன்சர்கள் பொருத்திய மோட்டார் சைக்கிள்களில் வலம் வந்தனர்.
உடனே சம்பவ இடத்திற்கு போக்குவரத்து இன்ஸ்பெக்டர் மயிலேறும் பெருமாள் தலைமையில் சென்ற போலீசார், அங்கு மோட்டார் சைக்கிள் சாகசத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, அவர்களது வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
மேலும் அவர்களுக்கு மொத்தம் ரூ.1.41 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக