குடியாத்தம் ,ஜன 23 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் கெளவுடன்னியா மகாநதியில் பல ஆண்டுகளாக வீடு கட்டி வசித்து வந்தவர்களை நீதிமன்றம் உத்தரவின் பேரில் வீடுகள் அப்புறப்படுத்தப்பட்டது வீடு இழந்தவர்களுக்கு படிப்படியாக இலவச வீட்டு மனை பட்டாக்கள் வழங்கப்பட்டு வருகின்றது
முதற்கட்டமாக இன்று காலை குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வீடு இழந்த 13 நபர்களுக்கு ஜிட்டபல்லி கிராமத்தில் இலவச வீட்டு மனை பட்டாக்கள் வழங்கப் பட்டது இதில் வட்டாட்சியர் மெர்லின் ஜோதிகா தேர்தல் பிரிவு துணை வட்டாட் சியர் பூங்கோதை மேற்கு வருவாய் ஆய்வாளர் கார்த்திக் சேம்பள்ளி கிராம நிர்வாக அலுவலர் விஜய பரத் ஆகியோர் உடன் இருந்தனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக