நாகர்கோவில் மாநகராட்சியில் பணிபுரியும் 1371 நிரந்தர மற்றும் ஒப்பந்த பணியாளர்களுக்கு பொங்கல் தொகுப்பு பரிசு மாநகராட்சி மேயர் மகேஷ் சொந்த நிதியில் இருந்து வழங்கினார்
தமிழர் திருநாள் தைப்பொங்கல் முன்னிட்டு நாகர்கோவில் மாநகராட்சியில் பணிபுரியும் 1371 நிரந்தர மற்றும் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு வணக்கத்துக்குரிய மேயர் குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் திரு.ரெ.மகேஷ் அவர்கள் தனது சொந்த நிதியிலிருந்து பொங்கல் தொகுப்பாக பொங்கல் பானை, கரண்டி,கரும்பு , வேட்டி,சட்டை, சேலை என பொங்கல் பரிசினை மாநகராட்சி ஆணையர் திரு.நிஷாந்த் கிருஷ்ணா இ.ஆ.ப அவர்கள் தலைமையில் வழங்கினார். திருமதி்.மேகலா மகேஷ் அவர்கள் மற்றும் ஆணையரின் பெற்றோர் மண்டலத்தலைவர்கள் மாமன்ற உறுப்பினர்கள் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் நிரந்தர,ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் கழக நிர்வாகிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர் என்.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக