சுதந்திர போராட்ட வீரர், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் 129-வது பிறந்த நாளை முன்னிட்டு, இராமநாதபுரம் சேதுபதி நகர் 4-வது பிரதான முகப்பு சாலையில், இராமநாதபுரம் பாரதிநகர், இந்தியன் வங்கி கிளை மேலாளர் திரு. கவியரசன் தலைமையில் ஆலம், அரசு, அத்தி, மகிழம், வேங்கை, வேம்பு, புங்கை, கொடுக்காப்புளி, திரிபுலா ஆகிய மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் கோஸ்டல் பீனிக்ஸ் விளையாட்டு கழக மாணவர்கள், அதன் பயிற்சியாளர் திரு. பிரசாத் மற்றும் நிக்கோலஸ் சிலம்பம் பயிற்சி பள்ளி மாணவர்கள் மற்றும் பசுமை குடைகள் இயக்கம் மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வை இராமநாதபுரம் பொருளாதார குற்றப்பிரிவு சிறப்பு சார்பு ஆய்வாளர் சுபாஷ் சீனிவாசன் ஏற்பாடு செய்திருந்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக