பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்!!!!! திட்டத்தின் 10 ஆம் ஆண்டு நிறைவு தினத்தினை கொண்டாடும் வகையில் நீலகிரி மாவட்ட சமூகநலத் துறை மூலமாக மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் கையெழுத்து இயக்கம் மற்றும் மிதிவண்டி பேரணி இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் வளாகத்தில் நடைபெற்றது. இதில் பள்ளி மற்றும் கல்லுாரி, மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். மேலும், சுகாதார துறை, பள்ளிக் கல்வி துறை, காவல் துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் துறை, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் போன்ற பல்வேறு துறைகளைச் சார்ந்த அதிகாரிகளும் இதில் பங்கேற்றனர்.மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையத்தள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட புகைப்பட கலைஞர் வினோத் குமார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக