உங்களைத் தேடி உங்கள் ஊரில்" திட்ட முகாமில் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு மாணவர் களுக்கு கணித பாடம் எடுத்த மாவட்ட ஆட்சியர்! - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

வியாழன், 23 ஜனவரி, 2025

உங்களைத் தேடி உங்கள் ஊரில்" திட்ட முகாமில் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு மாணவர் களுக்கு கணித பாடம் எடுத்த மாவட்ட ஆட்சியர்!


 நெமிலி  ஜன- 23 

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர். ஜெ.யு. சந்திரகலா, இ.ஆ.ப.,  "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" திட்ட முகாமில் நெமிலி வட்டம், பனப்பாக்கம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு வகுப்பறையில் கணித பாட  ஆசிரியர் சுமதி சுப்பிரமணி மாணவி களுக்கு கணித பாடம் கற்பிப்பதை மாணவிகளுடன் அமர்ந்து கவனித்து பார்வையிட்டார்கள் நல்ல பழக்க வழக்கங்களையும் சிறப்பான முறையில் படித்து மதிப்பெண்கள் பெற்று மாணவி களிடம் மாவட்ட ஆட்சியர் அறிவுரைகளை வழங்கினார்.இந்த நிகழ்வின் போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சரஸ்வதி பள்ளி தலைமை ஆசிரியர் சர்மிளா ஆசிரியர்கள்  உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர் மேலும் நிறைவு முடிவில்  மாணவி களுக்கு பாடம் எடுத்த கணித பாட ஆசிரியர் அவர்களுக்கு பாராட்டு களையும் வாழ்த்துகளையும் தெரிவித்தார் மாவட்ட ஆட்சியர்.

ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் மு.பிரகாசம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad