அதிமுக சார்பில் எம் ஜி ஆர் 108 வது பிறந்தநாள் விழா கோலாகலம் நிகழ்ச்சி ! - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

வெள்ளி, 17 ஜனவரி, 2025

அதிமுக சார்பில் எம் ஜி ஆர் 108 வது பிறந்தநாள் விழா கோலாகலம் நிகழ்ச்சி !

காட்பாடியில் அதிமுக சார்பில் எம்ஜிஆரின் 108 வது பிறந்தநாள் விழா கோலாகலம்!
வேலூர், ஜன.17-

 வேலூர் மாவட்டம்,  மாநகரத்திற்கு உட்பட்ட காட்பாடி ஓடை பிள்ளையார் கோயில் அருகில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு அவரது 108 வது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக வேலூர் மாநகர் மாவட்ட செயலாளர் எஸ். ஆர். கே. அப்பு ஆளுயர மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன் அதிமுக காட்பாடி வடக்கு பகுதி செயலாளர் ஜனார்த்தனன், மேற்கு பகுதி செயலாளர் நாராயணன், 10வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஆர். பி. ரமேஷ் , 6வது வட்ட செயலாளர் என். எழிலரசன், ஜெ. பேரவை நிர்வாகி பாலாஜி, தெற்கு பகுதி செயலாளர் பேரவை ரவி, காட்பாடி ஒன்றிய செயலாளர் கே.எஸ்.சுபாஷ், மகளிர் அணி லட்சுமி மற்றும் பலர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். இதில் அதிமுக நிர்வாகிகளிடையே பேசிய வேலூர் மாநகர் மாவட்ட செயலாளர் வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத் தேர்தலில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்க நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து பாடுபட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதை தொடர்ந்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. இதில் குறிப்பாக இனிப்புகளை மற்ற யாருக்கும் வழங்காமல் அதிமுக நிர்வாகிகளே பங்கு பிரித்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதைப் பார்த்த பொதுமக்கள் முகம் சுளித்தது குறிப்பிடத்தக்கது.

வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad