பேரணாம்பட்டில் எம்.ஜி.ஆரின் 108 வது பிறந்தநாள் விழா: பொது மக்களுக்கு பிரியாணி வழங்கல்!
வேலூர், ஜன.17-
பேரணாமாபட்டு தொலைபேசி வளாக அலுவலகத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் டாக்டர். எம்.ஜி.ஆரின் 108 வது பிறந்தநாள் விழா அதி விமரிசையாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவுக்கு வேலூர் மாவட்ட அதிமுக சிறுபான்மை பிரிவு துணை செயலாளர் ஹோட்டல் எம்.அய்யூப் தலைமை தாங்கினார். பேரணாம்பட்டு முன்னாள் ஒன்றிய குழு பெருந்தலைவர் பொகளூர் டி. பிரபாகரன், பேரணாம்பட்டு நகர அதிமுக செயலாளர் வழக்கறிஞர் எல். சீனிவாசன், தலைமை பொது குழு உறுப்பினர் முத்து சுப்பிரமணி, முன்னாள் நகர மன்ற உறுப்பினர். எஸ்.துர்கா தேவி சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எம்.ஜி.ஆரின் பிறந்த நாளை முன்னிட்டு ஏழை,எளியவர்களுக்கு பிரியாணி அன்னதானமாக வழங்கப்பட்டது. இந்த விழாவில் நகர, ஒன்றிய, மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் துரை திருமால், சாத்கர் எம். ரவி, எஸ்.ஜெயக்குமார், கே.கே. நகர் எஸ். தணிகாசலம், பண்ணு ரவி, முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் ஹரிதரன், மாவட்ட ஒன்றிய மீனவர் அணி செயலாளர் வி.கந்தன், முன்னாள் ஒன்றிய சிறுபான்மை பிரிவு தலைவர் ஏ.சீமான் உட்பட மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக