தூய சவேரியார் ஆலய 104வது
ஆண்டு திருவிழா கொடியேற்றம்.
25ம் தேதி தேர்பவனி, 27ம்தேதி பொது அசனம்.
தூத்துக்குடி மாவட்டம். சேதுக்குவாய்த்தான் கிராமத்தில் தூய சவேரியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் 104வது ஆண்டு திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
முன்னதாக ஆலய பங்குதந்தை பால் ரோமன் தலைமையில் திருப்பலி நடந்தது. தொடர்ந்து கொடியேற்றம், மறையுரை, நற்கருணை ஆசிர் நடந்தது. அதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவையொட்டி தினமும் திருயாத்திரை, திருப்பலி நடைபெறுகிறது.
9ம்நாள் திருவிழாவான வரும் 25ம் தேதி புனித ஜோசப் தொடக்கப்பள்ளி, புனித சவேரியார் நடுநிலைப்பள்ளி சார்பில் திருயாத்திரை நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் பங்குதந்தை பால் ரோமன் தலைமையில் வெளியூர் வாழ் சேக்குவாய்த்தான் மக்களுக்கான சிறப்பு திருப்பலியும் இறைமக்கள், பங்கு தந்தை சந்திப்பு நிகழ்ச்சியும் நடக்கிறது.
மாலை 6.30 மணிக்கு காவல்கிணறு அருட்திரு ஆலியன், மன்னார்புரம் வெனி, மதுரை குருத்துவக்கல்லூரி அல்போன்ஸ் ஆகியோர் மறையுரை நிகழ்த்துகின்றனர். தொடர்ந்து இரவு 9 மணிக்கு தேர் பவனி நடக்கிறது.
26ம்தேதி காலை 7 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட மேநாள் ஆயர் இவான் அம்புரோஸ் தலைமையில் திருவிழா கூட்டுத்திருப்பலி நடக்கிறது. தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு நற்கருணை பவனியும், 27ம்தேதி மதியம் ஊர் பொது அசனமும் நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை ஆலய பங்குதந்தை பால் ரோமன் , அருட்சகோதரிகள், திருவிழா கமிட்டியினர், பங்கு இறை மக்கள் செய்துள்ளனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக