திருப்பரங்குன்றம் அருகே இலவச மருத்துவ முகாம்.. 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்பு.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் வட்டம் நிலையூர் 1பிட் ஊராட்சி கூத்தியார்குண்டு கிராமம் மந்தைத்திடலில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
குமரேசன் முத்துலட்சுமி நினைவு அறக்கட்டளை, மதுரை வருவாய் மாவட்ட லயன்ஸ சங்கங்கள், விஜயா மருத்துவமனை, சுஜி ஹெல்த் கேர், வாய்ஸ் ட்ரஸ்ட், மேக்சி விஷன் மருத்துவமனை இணைந்து மாபெரும் இலவச மருத்துவ முகாம் சனிக்கிழமை நடத்தப்பட்டது.
இதைத்தொடர்ந்து குமரேசன் முத்துலட்சுமி நினைவு அறக்கட்டளையின் தலைவர் பாலசுந்தரம் அவர்கள் குத்து விளக்கு ஏற்றி இம்முகாமை துவக்கி வைத்தார். டாக்டர் குமரேசன் சங்கரன், டாக்டர் மொஷினா பானு, டாக்டர் சையது மரூப் ஷாஹிப், லயன்ஸ் கிளப் முதல் துணை ஆளுநர் செல்வம், லயன்ஸ் கிளப் முன்னாள் மாவட்ட ஆளுனர் அண்ணாமலை, முன்னாள் மாவட்ட ஆளுனர் சின்ன அருணாசலம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
சிறுவர்கள், முதியவர்கள், பாலூட்டும் தாய்மார்கள், மாற்றுத்திறனாளிகள், சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் மற்றும் 100க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு ரத்த பரிசோதனை செய்தனர். தொடர்ந்து ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு, ரத்த அழுத்த அளவு, உடல் பரிசோதனை, கண் பரிசோதனை, தோல் நோய் சிகிச்சை, தலைவலி, காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கான பரிசோதனைகளை செய்து அவர்களுக்கு தேவையான உரிய மருந்து, மாத்திரைகளை டாக்டர் பவன்குமார், டாக்டர் பிரவின்குமார் வழங்கினர். இம்முகாமிற்கான ஏற்பாட்டினை அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக