ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை நீர்நிலைகளின் சார்பில் ஏரியில் 10 ஆயிரம் மீன் குஞ்சுகள் விடும் பணி மாவட்ட ஆட்சியர் தொடக்கம்!
வேலூர்,ஜன.9 -
வேலூர் மாவட்டம், தமிழ்நாட்டில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை நீர்நிலைகளில் மீன்குஞ்சு இருப்பு செய்து உள்நாட்டு மீன் உற்பத்தியை அதிகரிக்கும் திட்டத்தின்கீழ் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் மூலம் வேலூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள சிவராம தாங்கல் ஏரியில் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி சுமார் 10,000 எண்ணிக்கையிலான மீன்குஞ்சுகளை இருப்பு செய்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்வின்போது மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் ஆ.மெர்சி அமலா, வேலூர் ஆர்டிஓ பாலசுப்பிரமணியன், வட்டாட்சியர் ஜெகன்மூர்த்தி, மீன்துறை ஆய்வாளர் கீர்த்தி வர்மன், பண்ணை தொழில் விவசாயிகள், அரசு துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக