கள்ளக்குறிச்சி மாவட்டம் முத்தமிழ் சங்கம் சார்பாக பாண்டலம் சமுதாய அரங்கத்தில் ஐம்பெரும்பிழா நடைபெற்றது
கள்ளக்குறிச்சி மாவட்ட முத்தமிழ் சங்கம் சார்பாக விவசாயிகள் தின விழா,கணித தினம், கிறிஸ்மஸ் விழா,தேசிய ஒருமைப்பாட்டு தின விழா , புத்தாண்டு வரவேற்பு, என ஐம்பெரும் விழா பாண்டலம் சமுதாய அரங்கத்தில் நடைபெற்றது, நிகழ்விற்கு சங்கராபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் ரோஜா ரமணி துரை தாகபிள்ளை தலைமை தாங்கினார், கல்லை மாவட்ட முத்தமிழ் சங்க தலைவர் முருகக்குமார் வரவேற்புரை ஆற்றினார்,பாண்டலம் ஊராட்சி மன்ற தலைவர் பாப்பாத்தி நடராஜன், அரிமா சங்க மாவட்ட தலைவர் வேலு, திருக்கோவிலூர் தமிழ் சங்கத் தலைவர் சிங்கார உதியன், சங்கராபுரம் வணிகர் சங்க செயலாளர் குசேலன், மாவட்டத் துணைத் aதலைவர் ராசு தாமோதரன், ஆகியோர் முன்னிலை வகித்தனர் தேசிய ஒருமைப்பாட்டை பற்றி சங்கராபுரம் நகர திருக்குறள் பேரவை செயலாளர் லட்சுமிபதி உரையாற்றினார், கிறிஸ்மஸ் தின விழாவை பற்றி ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் சாந்தகுமார் உரையாற்றினார்,கணித தினத்தைப் பற்றி அரசம்பட்டு தமிழ் சங்கத் தலைவர் சௌந்தரராஜன் உரையாற்றினார், விவசாயிகள் தினத்தைப் பற்றி வரகூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அறிவுடைய நம்பி உரையாற்றினார், புத்தாண்டு வரவேற்பு என்ற தலைப்பில் கல்லை தமிழ் சங்க செயலாளர் மதிவாணன் உரையாற்றினார், மாவட்ட முத்தமிழ் சங்க சிறப்பு தலைவர் பாவலர் சண்முக சுந்தரம் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விவசாயிகளுக்கு போர்வை வழங்கி பாராட்டி சிறப்பு செய்தார், பாண்டல வணிகர் சங்கத் தலைவர் செந்தில், தமிழ் படைப்பாளர் சங்கத் துணைத் தலைவர் கமலநாதன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்,நிகழ்வில் பாண்டலம் அரிமா சங்கத் தலைவர் குமார், சண்முகப்பிச்சப் பிள்ளை சக்திவேல், கிருஷ்ணமூர்த்தி, சுதாகரன், பாலசுந்தரம் ராமசாமி கமலஹாசன் அபி, பார்த்திபன், சரவணன்,முருகன், துரைமுருகன் இளையராஜா சஞ்சய் காந்தி, சங்கர் உட்பட பல பத்திரிகையாளர்கள் ஊர் பொதுமக்கள் என பெருந்திரளாக கலந்து கொண்டனர், ராதிகா தொகுத்து வழங்கினார் முடிவில் மாவட்டத் துணைத் தலைவர் கலைமகள் காயத்ரி நன்றி கூறினார்
கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB.குருசாமி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக