திருப்பத்தூர் மாவட்டத்தில் புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்களின் போது, இரவு நேரங்களில் பொதுமக்களுக்கு இடையூறு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா எச்சரிக்கை.
திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா உத்தரவின்படி மாவட்டத்தில் புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்களின் போது, இரவு நேரங்களில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகனங்களில் பந்தயம் வைத்து ‘பைக் ரேஸ்” செல்வது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
அவ்வாறு செய்பவர்களை கைது செய்து இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். மேலும் அவர்களது ஓட்டுநர் உரிமமும் ரத்து செய்ய பரிந்துரை செய்யப்படும்.
அதே போன்று சாலையில் செல்லும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பைக்கில் ‘வீலிங் செய்து Reels செய்வது, அஜாக்கிரதையாகவும், அதிவேகமாகவும் செல்வதும், பொது இடங்களில் மது அருந்துவது போன்ற பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள் மற்றும் மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மீதும் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திருப்பத்தூர், வாணியம்பாடி செய்தியாளர் R.மஞ்சுநாத் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக