நெய்வேலியில் குடியிருப்பு பகுதியில் எரிந்த நிலையில் எலும்புக்கூடு கிடந்ததால் பரபரப்பு. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 31 டிசம்பர், 2024

நெய்வேலியில் குடியிருப்பு பகுதியில் எரிந்த நிலையில் எலும்புக்கூடு கிடந்ததால் பரபரப்பு.

photo_2024-12-31_22-56-54

கடலூர் மாவட்டம் நெய்வேலி பகுதியில் என்எல்சி இந்தியா லிமிடெட் குடியிருப்பு பகுதியான டவுன்ஷிப் பகுதியில் எலும்புக்கூடு ஒன்று எரிந்த நிலையில் கிடந்துள்ளது இதை அடுத்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர் இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் எரிந்த இருந்த நிலையில் கிடந்த எலும்பு கூடை கைப்பற்றி சோதனை செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். 


அப்பொழுது அதே பகுதியில் குடியிருந்த என்எல்சி நிறுவன அதிகாரியின் மகள் மருத்துவம் படிப்பதற்காக வாங்கப்பட்ட செராமிக் எலும்புக்கூடு என்பதும் அவர்கள் வீட்டை காலி செய்த பொழுது அங்கேயே விட்டுவிட்டு சென்றதாகவும் அதே வீட்டிற்கு புதிதாக வந்தவர்கள் வீட்டில் கிடந்த செராமிக் எலும்பு கூடை எரித்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இந்த நிலையில் நெய்வேலியில் குடியிருப்பு பகுதியில் எலும்புக்கூடு எரிந்து கிடக்கிறது என சமூக வலைத்தளத்தில் வீடியோ வைரலாக பரவுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad