நாட்றம்பள்ளி அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5.5 கிலோ கஞ்சா பறிமுதல். ஒருவர் கைது மாவட்ட எஸ்பி தனிப்படை போலீசார் நடவடிக்கை.
வாணியம்பாடி, டிச.31- திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த சொர்காயல்நத்தம் பகுதியில் வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்கப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தாவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் மாவட்ட எஸ்பி தனிப்படை போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த முருகன் என்பவரின் வீட்டில் சந்தேகத்தின் பேரில் போலிசார் சோதனை செய்த போது வீட்டில் சுமார் 5.5 கிலோ கஞ்சா இருப்பதை கண்டறிந்து பறிமுதல் செய்து முருகனை திம்மாம்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதனை தொடர்ந்து போலிசார் விசாரணை நடத்தியதில் ஆந்திரா மாநிலத்தில் இருந்து கஞ்சா வாங்கி வந்து வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து திம்மாம்பேட்டை போலீஸார் முருகன் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திருப்பத்தூர்,வாணியம்பாடி செய்தியாளர் R.மஞ்சுநாத் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக