இதனை தொடர்ந்து ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் வசித்து வரும் ஃபயாஸ் அவர்களுக்கு சில தினங்களுக்கு முன் பிறந்த ஆண் குழந்தைக்கு கழுத்தில் பெரிய அளவில் நீர்க்கட்டி இருந்துள்ளது. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குழந்தைக்கு அதிக அளவில் மருத்துவ செலவிற்காக நிதி தேவைப்படுவதை அறிந்த ஈரோடு ஸ்ரீ முருக பெருமாள் அன்னதானம் சமூக சேவகர்கள் நல சங்கம் மற்றும் நண்பர்கள் இணைந்து ஒரே நாளில் 43ஆயிரம் ரூபாய் நிதி திரட்டி குழந்தையின் பெற்றோர்களிடம் வழங்கினர்.
குழந்தையின் பெற்றோர்கள் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர். இந்த குழந்தைக்கு செய்த மருத்துவ உதவி உட்பட இதுவரைக்கும் 24 பேருக்கு மருத்துவ உதவி செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக