கலைஞரின் கனவு இல்லம் விடியல் அரசின் ஒர் நலத்திட்டம் - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 2 ஜூலை, 2024

கலைஞரின் கனவு இல்லம் விடியல் அரசின் ஒர் நலத்திட்டம்

 


கலைஞரின் கனவு இல்லம் விடியல் அரசின் ஒர் நலத்திட்டம்                  


தமிழக முதல்வர் மு க ஸ்டாலின்  விடியல் அரசின் கீழ் அனைத்து கிராமப்புற மக்களுக்கு வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டுவதற்கு ஓர் அரிய வாய்ப்பு.   பெரும்பாலும் இடங்களில் நிறைய ஓட்டு வீடுகளே காணப்படுகின்றன அத்தகைய ஓட்டு வீடுகளை மாற்றி மாடி வீடுகளாக மாற்றி அமைக்க ஐயா முதல்வர் ஸ்டாலின் எடுத்த அறிக்கையின் வாயிலாக இந்த கலைஞரின் கனவு இல்லம் உள்ளது.  இந்தத் திட்டத்தில் மொத்தம்  ஒரு வீட்டிற்கு ரூபாய் 3.50.000 கிடைக்கும். இந்த பணத்தை வீடு கட்ட மூன்று தவணையாக தருவார்கள். 1) அஸ்திவாரம் போட்ட பிறகு முதல் தவணை பணம் கிடைக்கும். 2) ரூப் காங்கீரட் போட்ட பிறகு இரண்டாவது தவணை பணம் கிடைக்கும். 3) வீடு பினிஷிங் செய்த உடன் மூன்றாவது தவணை பணம் கிடைக்கும். இது முழுக்க முழுக்க தமிழ்நாடு அரசின் திட்டமாகும்.  இந்த கலைஞரின் கனவு இல்லத்தின் திட்டத்தை பெறுவதற்கு வாடகை வீட்டில் இருக்க வேண்டும், கிராமப்புறத்தில் ஏதாவது இடம் வாங்கிப் போட்டு இருந்தால் பட்டா இடமாக இருக்க வேண்டும். இடம் மனுதாரர் பெயரில் இருக்க வேண்டும். அரசாங்க வேலை பார்க்க கூடாது என பல கட்டுப்பாடுகள் உள்ளன. மற்றும் கொண்டு வரக்கூடிய ஆவணங்கள் பத்திரம் ஜெராக்ஸ், பட்டா ஜெராக்ஸ், கம்ப்யூட்டர் பட்டா, வில்லங்க  சான்று, காலி மனைக்கு கரம் தீர்த்த ரசீது, ரேஷன் கார்டு ஜெராக்ஸ், ஆதார் கார்டு ஜெராக்ஸ். இவை அனைத்தையும் அந்தந்த ஊராட்சி மன்ற தலைவருக்கு எழுதி ஆவணங்கள் அனைத்தும் வைத்து கொடுத்தால் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் அந்த மனு வந்த உடன் விசாரணை நடைபெறும் வீடு மொத்தம் 350 சதுர அடிகள் இருக்க வேண்டும்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதையாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/