தமிழ்நாடு கந்துவட்டி தடைச் சட்டம், 2003 - என்ன சொல்கிறது...AND தனிநபர் அரசு அனுமதி இல்லாமல் ( License இல்லாமல் ) வட்டி-க்கு பணம் கொடுப்பது சட்டப்படி குற்றமா...? - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 25 ஜூலை, 2024

தமிழ்நாடு கந்துவட்டி தடைச் சட்டம், 2003 - என்ன சொல்கிறது...AND தனிநபர் அரசு அனுமதி இல்லாமல் ( License இல்லாமல் ) வட்டி-க்கு பணம் கொடுப்பது சட்டப்படி குற்றமா...?


 தமிழ்நாடு கந்துவட்டி தடைச் சட்டம், 2003 - என்ன சொல்கிறது...AND தனிநபர் அரசு அனுமதி இல்லாமல் ( License இல்லாமல் ) வட்டி-க்கு பணம் கொடுப்பது சட்டப்படி குற்றமா...?


1. கத்துவட்டி :- (Usury)


வருடத்திற்கு 18% மேல் வட்டி வசூலிப்பவர்களுக்கு, மூன்றாண்டுகள் வரையிலான கடுங்காவல் சிறைத்தண்டனை மற்றும் ரூ 30,000 அபதாரமும் (fine) விதிக்கப்படும்.


அதீத வட்டி வசூலிக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் காவல்துறையினருக்கு வழங்கப்பட்டுள்ளது. 


மேலும் பாதிக்கப்பட்டவர்கள், குற்றவியல் நீதிமன்றத்தையும் அணுகலாம்.


கடன் பெற்றவர்களின், அசையும் மற்றும் அசையா சொத்துக்களை வட்டிக்காரர்கள் அபகரித்திருந்தால், அதனையும் நீதிமன்றமே மீட்டுக்கொடுக்கும்.


வட்டிக்குப் பணம் கொடுத்து வாங்குவதை முழுநேரத்தொழில் ஆக 

நடத்துபவர்கள், ‘தமிழ்நாடு மணி லெண்டர்ஸ் ஆக்ட், 1957’ கீழ் தாசில்தாரிடம் லைசென்ஸ் வாங்க வேண்டும்.


ஒருவருக்கோ, சிலருக்கோ பணம் கொடுத்து வட்டி வாங்குவதற்கு, லைசென்ஸ் எடுக்கவேண்டும் என்று அவசியமில்லை.


2. தனி நபர் அரசு அனுமதி இல்லாமல்,லைசென்ஸ் இல்லாமல் வட்டிக்குப் பணம் கொடுப்பது சட்டப்படி குற்றமா? அப்படி வட்டிக்குக் கொடுத்தால் என்ன தண்டனை?


வட்டிக்குப் பணம் கொடுத்து வாங்குவதை முறைப்படுத்துவதற்காக ஒவ்வொரு மாநிலமும் தனியாகச் சட்டம் கொண்டு வந்துள்ளது. அதில் தமிழ்நாடு 1957-லிருந்து வட்டிக்குப் பணம் கொடுப்பதை நெறிப்படுத்தும் சட்டம் TamilNadu_Money_Lenders_Act, 1957 நடைமுறையில் உள்ளது.


அதன்படி வட்டிக்குப் பணம் கொடுப்பதைத் தொழிலாக நடத்துபவர்கள் முறைப்படி தாசில்தாரிடம் அனுமதி பெற்று நடத்தவேண்டும். 


இது தனி நபர், கூட்டாக பங்குதாரர்களாக நடத்தலாம். ஆனால் இந்தச் சட்டம் வங்கிகளுக்கோ, வட்டிக்குப் பணம் கொடுக்கும் கூட்டுறவு சங்கங்கள், நிதி நிறுவனங்களுக்குப் பொருந்தாது. ஏனென்றால் டெபாசிட் வாங்குவது வட்டிக்குப் பணம் கொடுப்பது என்றால் வங்கி நடைமுறைக்கு கீழ் வருவதால் அதற்கு ரிசர்வ் வங்கியில் அனுமதி பெற வேண்டும்.


நான் டெபாசிட் எதுவும் வாங்கவில்லை, வெறுமனே பணம் மட்டுமே வட்டிக்குக் கொடுத்து வாங்குகிறேன் என்றால் அதற்கு தாசில்தாரிடம் லைசென்ஸ் வாங்க வேண்டும். அடகுக் கடை வைத்திருப்பவர்கள் லைசென்ஸ் வாங்குவது போல் இதற்கும், ‘மணி லெண்டர்ஸ் ஆக்ட் 1957’-ன் கீழ் உள்ள சட்டத்தின் கீழ் லைசென்ஸ் வாங்க வேண்டும்.


அப்படி இல்லாமல் வட்டிக்குப் பணம் கொடுத்து வாங்குவதை முழுநேரத் தொழிலாக செய்வது சட்டப்படி குற்றம். ஒரு வித்தியாசம் என்னவென்றால் அதை முழு நேரத் தொழிலாக ஒரு இடத்தில் நிறுவனம் தொடங்கி முழு நேரத் தொழிலாகச் செய்தால் லைசென்ஸ் எடுக்க வேண்டும். 


ஆனால் ஒரு தனிநபர் யாருமே தனது வாழ்க்கையில் மற்றவர்களிடம் பணம் கொடுத்து வட்டி வாங்குவது நடக்கும்.


தனது நண்பர்களுக்கு, உறவினர்களுக்கு வாழ்க்கையில் பணத் தேவைக்கு உதவும்போது பணம் கொடுத்து வட்டி வாங்குவது வழக்கமாக இருக்கும். 


அவர்களை முழு நேரத் தொழிலாக நாம் எடுத்துக்கொள்ள முடியாது. அதில் லைசென்ஸ் எடுக்கவேண்டும் என்கிற அவசியமில்லை. 


ஒருவருக்கோ, சிலருக்கோ உதவி செய்வதை லைசென்ஸ் வாங்கி செய்யவேண்டும் என்று அவசியமில்லை.


ஒருவேளை ஒருவர் லைசென்ஸ் எடுக்காமல் தொழிலாகச் செய்தார் என்று புகார் வந்தால் அதற்கு தண்டனை ஆயிரம் ரூபாய் நீதிமன்றத்தால் விதிக்கப்படும். சிறைத் தண்டனை எதுவும் இல்லை.


இதில் கோடிக்கணக்கில் பணம் வட்டிக்கு கொடுத்திருந்து உரிமம் வாங்கவில்லை என்று குற்றச்சாட்டு வந்தாலும் சட்டம் தொகையைப் பற்றி சொல்லவில்லை. 


உரிமம் வாங்காமல் வட்டிக்குப் பணம் கொடுத்து தொழில் செய்வதுதான் குற்றம் என்கிறது.


ஒருவேளை நடவடிக்கை வந்தால் அதற்கு ரூ.1000 அபராதம் என்பதுதான் சட்ட நடவடிக்கை.               

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/