T20 பாகிஸ்தானை அமெரிக்கா வென்றது. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 7 ஜூன், 2024

T20 பாகிஸ்தானை அமெரிக்கா வென்றது.

 


T20 பாகிஸ்தானை அமெரிக்கா வென்றது.


T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்காவில் நடைபெறுகிறது. பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா இடையில் நடந்த போட்டியில் டாஸ் வென்ற அமெரிக்க அணி பந்துவீசியது.


முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 159 ரன்கள் எடுத்தது. 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அமெரிக்க  அணி 20  ஓவர்களில் பரபரப்பான 19 வது ஓவரின். இறுதி பந்தில் 4 ரன்கள் எடுக்க  3 விக்கெட்களை மட்டுமே இழந்து 159 ரன்களுடன் முடித்ததால் ஆட்டம் டிராவிஸ் முடிந்தது.


ஏராளமான ரசிகர்கள் புடைசூழ ஆட்டம் சூப்பர் ஓவருக்கு சென்றது. சூப்பர் ஓவரில் முதலில் பேட்டிங் செய்த அமெரிக்க அணி 18 ரன்கள் எடுத்து 19 ரன்களை வெற்றி இலக்காக நிர்னயித்தது. சூப்பர் ஓவரில் கடின இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணி 1 விக்கெட் இழந்து 13 ரன்கள் மட்டுமே எடுத்தது. 5 ரன்கள் வித்தியாசத்தில் அமெரிக்க அணி வெற்றிபெற்றது.


பலம் மற்றும் அனுபவம் வாய்ந்த பாகிஸ்தான் அணியை  T20 உலக கோப்பையின் முதல் சுற்று  போட்டியில் வென்ற அமெரிக்க அணிக்கு உலகம் முழுவதிலிருந்தும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துவருகின்றனர்.


அமெரிக்க ரசிகர்கள்  கூறுகையில் இந்த வெற்றி T20 உலக கோப்பையை வென்றதற்க்கு சமம் என பெறும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A.கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/