அசைவ உணவு உண்பவர்கள் தமிழகத்தில் எத்தனை % பேர். - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

ஞாயிறு, 9 ஜூன், 2024

அசைவ உணவு உண்பவர்கள் தமிழகத்தில் எத்தனை % பேர்.

 

IMG-20240609-WA0006

அசைவ உணவு உண்பவர்கள் தமிழகத்தில் எத்தனை % பேர்.

IMG-20240609-WA0005

இந்தியாவில் அசைவ உணவு உண்பவர்கள் 85 சதவீதத்திற்கும்  மேல் என ஆய்வில் தெரியவந்துள்ளது.


மக்கள் மட்டன், சிக்கன்,மீன், முட்டை, பீப், போர்க் என ஏதோ ஒருவகையில் அசைவம் உண்ணுகின்றனர். சிலர் தொடர்ந்தும் சிலர் இடைவெளி விட்டும் சிலர் வருடத்திற்கு ஒருமுறையும் என பலவகைகளில் அசைவம் உண்ணுகின்றனர்.


மாநில வாரியாக பிரிக்கும் பொழுது தமிழகத்திற்கு எந்த இடம் எத்தனை சதவிகிதம் பேர் விரும்பி அசைவ உணவு உண்கிறார்கள் என்ற ஒரு ருசிகரமான சுவாரசியமான தகவல் ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.


அதன் விபரம்.....


இந்தியாவிலேயே அதிக அசைவ உண்ணும் மாநிலமாக *நாகாலாந்து முதலிடத்தில் உள்ளது இங்கு வசிக்கும் மக்களில் 99.8 சதவிகிதம் பேர் அசைவ உணவை விரும்பி சாப்பிடுபவர்கள் ஆக உள்ளனர்.

 

99.3 சதவிகிதம் பேருடன் மேற்குவங்கம் இரண்டாம் இடத்தில் உள்ளது.


மூன்றாம் இடத்தில் *கேரளா உள்ளது இங்கு 99.1 சதவிகிதம் பேர் அசைவம் (மீன் உணவு அதிகம்) உண்பவர்களாக உள்ளனர்.


நான்காம் இடத்தில் *ஆந்திரா 98.25 சதவிகிதத்துடன் உள்ளது.


 கர்நாடகா 98.02 சதவிகிதத்துடன் 5 ஆம் இடத்தில் உள்ளது.


தமிழகம் 97.65 சதவிகிதம் மக்கள் அசைவ உணவு விரும்பி உண்பவர்களாக  6 ஆம் இடத்தை பெற்றுள்ளது. அதிலும் தமிழக மக்கள் சிக்கன் பிரியாணியை அதிகம் விரும்பி உண்பதாக சுவாரஸ்யமான ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கிறது.


ஒரிசா 97.35 சதவிகிதம் பெற்று ஏழாம் இடத்தில் உள்ளது.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad