சென்னை புழல் பகுதியில் வீட்டின் ஒப்பந்த தொகையை மீட்டு தரக்கோரி இளம் பெண் தர்ணா - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 8 ஜூன், 2024

சென்னை புழல் பகுதியில் வீட்டின் ஒப்பந்த தொகையை மீட்டு தரக்கோரி இளம் பெண் தர்ணா


சென்னை புழல் ரெட்டி தெருவில்  வசித்து வருபவர் மாலதி இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மழையால் பாதிக்கப்பட்டுள்ளார் இதனால் வீடு இழந்தவர் கைக்குழந்தையுடன் சார்லஸ் என்பவரை தொடர்பு கொண்டு தனக்கு வீடு வேண்டும் என்று கேட்டுள்ளார் இதனை அடுத்து சார்லஸ் மார்க் என்பவரை அறிமுகப்படுத்தி அவர் மூலமாக நான்கு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெற்றுக் கொண்டு அறிந்து அண்ணா நகர் பகுதியில் உள்ள மார்க்வர்களின் வீட்டிற்கு ஒப்பந்தமாக சென்றுள்ளார் நான்கு லட்சத்து ஐம்பதாயிரம் பெற்றுக் கொண்ட மார்க் மாலதிக்கு வீடு ஒப்பந்தம் அளித்துள்ளார் இந்நிலையில் வங்கிகள் கடன் வாங்கி உள்ளதாக வங்கி அதிகாரிகள் வீட்டிற்கு வந்து கூறியுள்ளனர்.


இதனை அடுத்து சார்லஸ்சை தொடர்பு கொண்ட மாலதி வீட்டிற்கு வங்கி அதிகாரிகள் வந்துள்ளதாகவும் வீட்டு காலி செய்ய வருவதாக கூறியுள்ளனர் இதனை அடுத்து சார்லஸ் அதெல்லாம் பார்த்துக் கொள்ளலாம் நான் பார்த்துக் கொள்கிறேன் நீங்கள் கவலைப்பட வேண்டாம் என்று கூறியுள்ளார் இந்நிலையில் ஒரு வருடம் கழித்து ஒப்பந்தத்தை நினைத்து கொள்வதாக கூறியுள்ளார் என் நிலையில் ஒப்பந்தத்தை நீடிப்பதற்கு 50 ஆயிரம் பெற்றுக் கொண்டு ஒப்பந்தம் நீடித்துள்ளார் இந்நிலையில் வங்கி ஊழியர்கள் அதிகாரிகளுடன் வந்து வீட்டை சீல் வைத்துள்ளனர்.


இதனை அடுத்து வங்கி அதிகாரிகள் பொருட்கள் அனைத்தையும் வெளியில் எடுத்து வைத்துள்ளனர்  இதனை அடுத்து தன்னுடைய ஐந்து லட்சம் ரூபாய் தர வேண்டும் என கேட்டுள்ளார் மேலும் காவல் நிலையம் சென்று புகார் அளித்துள்ளார் புகார் பெற்றுக் கொண்ட காவல் துறை நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளனர் மேலும் காவல்துறை நடவடிக்கைகளை திருப்தி அடையாத மாலதி உயர் காவல்துறை அதிகாரிகளையும் சந்தித்துள்ளார்.


அதிலும் திருப்தி அடையாத மாலதி இன்று  காலை முதல் வீட்டின் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார் தகவல் அறிந்த புழல் காவல் நிலைய ஆய்வாளர் ராஜா சிங் தலைமையிலான காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாலதியிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் பேச்சுவார்த்தைக்கு உடன்படாத மாலதி சுமார் 4 மணி நேரமாக தர்ம போராட்டத்தை நீடித்தார்.


மேலும் தொடர் பேச்சுவார்த்தையை அடுத்து காவல் ஆய்வாளர் சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து மாலதி தனது தர்ணா போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்திக் கொள்வதாக கூறியுள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/