குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு தினம் உறுதிமொழி - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 13 ஜூன், 2024

குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு தினம் உறுதிமொழி

 


குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு தினம் உறுதிமொழி


ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12 சாவதேச குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. தமிழக அரசும் இத்தினத்தை குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு தினமாக அனுசரிக்க அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, விருதுநகர், மாவட்ட ஆட்சியர் மற்றும் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) அவர்களின் உத்தரவின்படி, சிவகாசி பகுதியில் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு தின உறுதி மொழி எடுக்கப்பட்டது.


12.6.2024 அன்று ஹவுசிங் போர்டு பேருந்து நிறுத்தம் அருகே சிவகாசி, வட்ட சட்டப் பணிகள் குழு தலைவர்/சார்பு நீதிபதி திரு. எஸ். முருகவேல், பிஏ., பிஎல்., அவர்கள், குற்றவியல் நீதித்துறை நடுவர்-2, திரு. எஸ். அமலநாத கமலகண்ணன். பிஏ., பிஎல்., ஹானர்ஸ்., அவர்கள் தலைமையில் சிவகாசி, வருவாய் வட்டாசியர் அவர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் ஆகியோரால் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு தின உறுதிமொழி எடுக்கப்பட்டு, குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிரான வாசகம் அடங்கிய பதாகையில் கையொப்பமிட்டார்கள். அதனைத் தொடர்ந்து சிவகாசி, தலைவர்/ சார்பு நீதிபதி திரு. எஸ். முருகவேல், பிஏ பிஎல்., அவர்கள் பிரச்சார வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார். மேற்படி பிரச்சார வாகனம் மக்கள் அதிகமாக கூடும் இடங்கள், தொழிலாளர்கள் பணிபுரியும் கடைகள் மற்றும் நிறுவனங்களில் குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்தியும், நோட்டீஸ் விநியோகித்தும் குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிராக விழிப்புணாவு ஏற்படுத்தப்பட்டது. மேற்படி நிகழ்ச்சியில் சிவகாசி, தொழிலாளர் துணை ஆய்வாளம், திரு. கே. சிவகுமார். தொழிலாளர் உதவி ஆய்வாளம் திருமதி பாத்திமா மற்றும் தொழிலாளர் துறை உதவியாளர் திருமதி, மு. சத்தியா ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், சிவகாசி வருவாய் கோட்டாசியர் அலுவலகம் வட்டாசியர் அலுவலகம், மற்றும் ரயில் நிலையங்களில் விழிப்புணர்வு பதாகைகள் வைத்தும் கடைகள், உணவுநிறுவனங்கள், பேருந்துகளில் குழந்தைத் தொழிலாளர் விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஓட்டப்பட்டது. 



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/