பெற்றோர்களே உஷார் மெகா அபராதம் தண்டனை அமலுக்கு வந்தது. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 1 ஜூன், 2024

பெற்றோர்களே உஷார் மெகா அபராதம் தண்டனை அமலுக்கு வந்தது.


பெற்றோர்களே உஷார் மெகா அபராதம் தண்டனை அமலுக்கு வந்தது.


இந்தியாவில் 18 வயது நிரம்பாத சிறார்கள் வாகனம் இயக்குவதால் அதிக அளவு விபத்துக்களும் உயிரிழப்பும் ஏற்படுவதை தடுக்கும் வகையில் போக்குவரத்து விதிமீறலின் புதிய  சட்ட முறை  இன்று (ஜூன் 1) முதல் அமலுக்கு வந்தது.


18 வயது நிரம்பாத சிறார்கள் வாகனம் இயக்கி பிடிபட்டால் கீழ் கண்ட மெகா அபராதங்கள் இன்று முதல் விதிக்கப்படும்.


*சிறார் இயக்கிய வாகனத்தின் பதிவு ரத்து செய்யப்படும்.


*ரூபாய் 25000 அபராதம் விதிக்கப்படும்.


*மூன்று மாதங்கள் வரை சிறைத்தண்டனை.


*25 வயது ஆகும் வரை ஓட்டுனர் உரிமம் பெற முடியாது.


*வாகனம் இயக்கிய சிறாரின் பெற்றோர்களுக்கும் தண்டனை விதிக்கப்படும்.


ஆகவே தங்களது சிறார்கள் வாகனம் இயக்காமல் அறவுறுத்தி விலை மதிப்பற்ற உயிரை காப்பாற்றி தண்டனை மற்றும் அதிகப்படியான அலைச்சலில் இருந்து தங்களையும் தங்கள் குழந்தைகளையும் காப்பாற்ற வேண்டும் என தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/