பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் 3 கோடி வீடுகள் கட்ட நிதியுதவி அளிக்க முடிவு.
ஜவஹர்லால் நேருக்குப்பின் மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க பதவியேற்ற ஐயா பிரதமர் மோடி தலைமையிலான முதல் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்.
கடந்த 10 ஆண்டுகளில் 4.21 கோடி வீடுகள் கட்டப்பட்டுள்ள நிலையில் மேலும் 3 கோடி வீடுகள் கட்ட முடிவு. இவ்வித நலத்திட்டத்தின் கீழ் உள்ள அனைத்து ஓட்டு வீடுகளும் மாடி வீடுகளாக காட்சியளிக்கும் மற்றும் அனைத்து மக்களும் பயனடைவர். மலைகளின் அரசி உதகையில் வாழும் மக்கள் இந்தத் திட்டத்தின் மூலம் மழை நேரங்களில் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். இந்த ஒப்பந்தம் மக்களிடையே பெரும் வரவேற்பை எட்டி உள்ளது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக