வாகனம் ஓட்டும் மைனருக்கு மெகா அபராதம். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 30 மே, 2024

வாகனம் ஓட்டும் மைனருக்கு மெகா அபராதம்.


 வாகனம் ஓட்டும் மைனருக்கு மெகா அபராதம்.


இந்தியா முழுவதும் வாகனங்கள் இயக்க 18 வயது பூர்த்தியானவர்கள் முறையாக பயிற்சி பெற்று ஓட்டுனர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.


சமீப காலமாக 18 வயது நிரம்பாத மைனர்கள் வாகனத்தை போலீஸ் கண்களில் படாமல் திருட்டுத்தனமாக இயக்கி வருகின்றனர் இது மிகப்பெரிய குற்றமாகும் எனவும் அப்படி இயக்கும் மைனரின் தந்தையின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும் மற்றும் அதிக அபராதம் விதிக்கப்படும் என பலவகையில் அபராதமும்  அறிவுரையும் வழங்கிவந்தனர்.


இந்த ஆண்டு மைனர்கள் வாகனம் ஓட்டுவதும் போதையில் வாகனத்தை இயக்கி விபத்து ஏற்படுத்துவது மற்றும் உயிரிழப்பு ஏற்படுத்துவது அதிகரித்தள்ளது.


ஜூன் 1 ஆம் தேதி முதல் வாகனம் இயக்கி சிக்கும் மைனர்களுக்கு ஏற்கனவே உள்ள  தண்டனையுடன் அவர் இயக்கிய வாகனத்தின் பதிவு ரத்து செய்யப்படும் மற்றும் 25000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் சட்ட விதி அமலுக்கு வருகிறது.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A.கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/